பிக்பாஸ் அல்டிமேட்: அந்த கேள்விக்கு கடுப்பான வனிதா..கூச்சத்தில் தாடி பாலாஜி..நிரூப்பின் விளக்கம்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கிய முதல் நாளே பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு வனிதா கடுப்பாகி இருக்கிறார்.
குழந்தைகள் பார்க்கிற நிகழ்ச்சியில் இப்படியா கேள்விகளை கேட்பார்கள் என்று அவர் கோபத்தோடு டாஸ்க்கை விட்டு கிளம்பியிருக்கிறார்.
வனிதா மட்டுமல்லாமல் அந்த கேள்வியை பார்த்ததுமே தாடி பாலாஜி நான் கேட்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

வித்தியாசமான நிகழ்ச்சிதான்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள்தான் ஆகிறது என்றாலும் அதில் பிரச்சனைகளுக்கும், கலவரங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இந்த அல்டிமேட் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று 100 நாட்கள் இல்லாமல் 70 நாட்கள் மட்டுமே இருப்பதால் இப்போதே கச்சேரி தொடங்கி விட்டதா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். அந்த அளவில்தான் இங்கே பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகிறது. முதல் நாளே இந்த வாரத்துக்கான நாமினேஷன் தொடங்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் கணிப்பு
அல்டிமேட் நிகழ்ச்சி எந்த சீசனிலும் இல்லாதவகையில் வித்தியாசமாக இருக்கும் என்பது அனைவருடைய கணிப்பாக இருக்கிறது. காரணம் இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மீண்டும் தங்களுடைய ரசிகர்களிடம் தங்களை நிரூபிப்பதற்காக இதில் களமிறங்கி இருப்பதால், இவர்கள் எப்படியும விளையாட்டை வேற லெவலில் கொண்டு செல்வார்கள் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பும் தான். பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர்.

பிரச்சனையை தொடங்கிய வனிதா
முதல் நாளிலே எலிமினேஷன் தொடங்கியது போலவே, டாஸ்க்கும் தொடங்கிவிட்டது. நேற்றைய முதல் நாள் டாஸ்க்கில் கடி அல்லது குடி எனும் ஒரு வித்தியாசமான டாஸ்க் தொடங்கப்பட்டது. அதில் ஒரு பேப்பரில் பலவிதமான கேள்விகள் எழுதப்பட்டு ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு போட்டியாளர்களும் அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்து அதில் இருக்கும் கேள்விகளை படிக்க வேண்டும். அதற்கு பதில் சொல்லும் விதமாக மீதமிருக்கும் போட்டியாளர்கள் ஆமாம் என்றால் குடிக்க வேண்டும், இல்லை என்றால் கடிக்க வேண்டும் என்று இருந்தது. ஆரம்பம் முதலே இந்த விளையாட்டில் வனிதா ஆர்வமாக செயல்படாமல் வேண்டுமென்றே பிரச்சனையை இழுக்கும் விதமாக தவறுதலாக பதில் சொல்லிக்கொண்டு கடித்து கொண்டிருந்தார்.

அதிர வைத்த அந்த கேள்வி
அந்த வரிசையில் தாடி பாலாஜியின் கையில் ஒரு சீட்டு கிடைத்தது. அந்த சீட்டில் இருந்த கேள்வியை நான் படிக்க மாட்டேன் என்று தாடி பாலாஜி நெளிந்து கொண்டிருந்தார். அதை வாங்கி நிரூப் படித்தார். அதில் காண்டத்தை ஊதி விளையாடி இருக்கிறீர்களா?? என்று இருந்தது. இதை கேட்டதும் கடுப்பான வனிதா இது எல்லாம் ஒரு கேள்வியா?? இது நான் பதில் சொல்ல மாட்டேன். நான் இந்த விளையாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று வெளியேறினார். அது மட்டுமல்லாமல் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா கேள்வி கேப்பாங்க என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதை பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி இதை குழந்தைகள் எல்லாம் பார்க்க மாட்டாங்க என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

நிரூப் கொடுத்த புது விளக்கம்
அதுமட்டுமல்லாமல் கேள்வியைப் பார்த்ததும் நிரூப் இந்த மாதிரி கேள்விகளுக்கு நாம் தயங்கக்கூடாது. இதைப்பற்றி 11ஆம் 12ஆம் வகுப்பில் பாட புத்தகத்தில் வந்தால்கூட அதை ஆசிரியர்களும் தெளிவாகச் சொல்லித் தருவதில்லை. அதனால் தான் அதிகமான கற்பழிப்புகள் போன்றவை நடக்கிறது என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால் இதைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் இதை அருவருப்பாக யாரும் நினைக்க கூடாது என்று இவர் புது விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் காண்டத்தை தான் பலூன் போல ஊதி விளையாடி இருப்பதாகவும் ,அனைவர் முன்னாடியும் ஒத்துக்கொண்டார். இந்த மாதிரி இந்த டாஸ்கில் இது மட்டுமல்லாமல் பல முகம் சுளிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பப்பட்டது. சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications