இணையத்தில் லீக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்... இந்த முறை இத்தனை போட்டியாளர்களா..!?
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களின் பெயர்களை இணையத்தில் அதிகமானோர் தேடி வருகின்றனர்.
இந்த முறையேனும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் வருவார்களா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்களாம்.
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

ஆறாவது சீசன் விரைவில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அதனாலேயே தற்போது ஆறாவது சீசன் தொடங்கிவிட்டது. தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழ் ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் இந்த நிகழ்ச்சிக்காக ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள். தற்போதைய பிக்பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று அதிகமானோர் இணையத்தில் தேடி வருகிறார்கள்.

புது வியூகம்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தது. அதற்குப் பிறகு பல புது முகங்கள் அறிமுகமானதால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் இதனை தொடர்ந்து பார்த்து வரவில்லை. இந்த நிலையில் தற்போது தன்னுடைய ரசிகர்களை மீண்டும் கொண்டு வந்து விட வேண்டும் என்று பிக் பாஸ் பார்த்து பார்த்து போட்டியாளர்களின் போட்டியாளர்களை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொள்வதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

எதிர்பார்க்கப்படுபவர்கள்
ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பும் இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் என்று பல்வேறு நபர்களின் பெயர்கள் அடிபட்டு வரும். ஆனால் கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சி அன்று தான் போட்டியாளர்களின் இறுதியான பெயர் பட்டியல் தெரிய வரும். அதுபோல்தான் தற்போதும் நடக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியை சார்ந்த ஒரு சிலர் இதில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. அதில் மைனா நந்தினி, ஆயிஷா, விஜே மகேஸ்வரி, விசித்ரா, ஸ்ரீநிதி, ரட்சிதா மகாலட்சுமி என பலருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

பொறுத்துப் பார்ப்போம்
கடந்த சீசனிலும் ஜி.பி முத்துவின் பெயர் அதிகமாக அடிபட்டு வந்தது. ஆனால் என்னால் போன் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போதும் அவருடைய பெயர் இந்த சீசனில் அடிபட்டு வருகிறது. அதுபோக நடிகை ஷில்பா மஞ்சுநாத், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அமுதவாணன் போன்றவருடைய பெயரும் அந்த லிஸ்டில் இருந்து வருகிறது. தற்போது ஆறாவது சீசன் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மட்டுமே கசிந்து வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்த்தால் ரசிகர்கள் கெஸ் பண்ணுனது சரியா என்று தெரியும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications