உங்க புருஷன் அனுப்பிய ஆடியோ ஆதாரத்தை காட்டவா? சான்ட்ராவை சீண்டிய ரம்யா ஜோ! புது பஞ்சாயத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முடிந்து சில வாரங்கள் கடந்துவிட்டாலும், வீட்டுக்குள் நடந்த சண்டைகள் இன்னும் வெளியில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்ட போட்டியாளர்கள், வெளியே வந்த பிறகும் சமூக வலைதளங்கள், பேட்டிகள், ஸ்டோரிகள் மூலமாக ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
முன்னெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மணி நேர எபிசோடாக மட்டும் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போது 24 மணி நேரமும் லைவ் ஒளிபரப்பு இருப்பதால், ரசிகர்கள் போட்டியாளர்களின் ஒவ்வொரு செயலையும் நேரடியாகப் பார்க்க முடிகிறது. இருந்தாலும், "எடிட்டிங் காரணமாக எங்களை தவறாக காட்டிட்டாங்க", "நாங்க பண்ணாத விஷயத்தை பெரிய விஷயமா காட்டினாங்க" என்ற குற்றச்சாட்டுகளை பல போட்டியாளர்கள் வெளியே வந்த பிறகும் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

நடிப்பு அரக்கி ட்ரோல்
இந்த சீசனில் ரசிகர்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டவர்களில் ஒருவர் சான்ட்ரா. அவருடைய நடிப்பு, ஓவர் ரியாக்ஷன் எனக் கூறி சமூக வலைதளங்களில் "நடிப்பு அரக்கி" என்ற பெயரில் பல மீம்ஸும் கிண்டல்களும் வைரலானது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும், சான்ட்ரா பல போட்டியாளர்கள் குறித்து பேட்டிகளில் குறை கூறி வருவது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"வீட்டுக்குள் சிலர் மட்டும் தான் உண்மையா இருந்தாங்க" என்ற வகையில் சான்ட்ரா பேசுவது, மற்ற போட்டியாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சபரி ஆகிய இருவரை மட்டும் நல்லவர்கள் என்று சான்ட்ரா அடிக்கடி குறிப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரம்யா ஜோ கொடுத்த பதிலடி
இதனால் கோபமடைந்த ரம்யா ஜோ, சமூக வலைதளங்களில் சான்ட்ராவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில், "நீங்களும் உங்க புருஷனும் மட்டும்தான் இந்த பிக் பாஸ் வீட்டில் நல்லவங்கன்னு நினைக்கிறீங்களா? இந்த நிகழ்ச்சியை பார்த்தவங்களுக்கே உண்மை என்னன்னு தெரியும்" என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "உன்னுடைய கணவர் பிரஜன் எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கார். அதுக்கான ஆதாரம் என்னிடம் இருக்கு. அதை வெளியிடவா?" என்று கூறி, ஒரு ஸ்கிரீன்ஷாட் பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுப்பில் ரம்யா ஜோ
தொடர்ந்து, "உங்க பேட்டிகளில் நீங்க, விக்கல்ஸ் விக்ரம், சபரி மூன்று பேரு மட்டும் தான் நல்லவங்கன்னு சொல்றீங்க. அப்போ வீட்டுக்குள்ள இருந்த மற்ற 20 பேர் எல்லாம் என்ன? நாங்க எல்லாரும் ஏதாவது பெரிய குற்றம் பண்ணின மாதிரி ஏன் பேசுறீங்க?" என்று ரம்யா ஜோ கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கருத்துகள் ரசிகர்களிடையே சான்ரா - ரம்யா ஜோ இடையிலான மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
மீண்டும் ட்ரோல்
இதோடு நிற்காமல், ரம்யா ஜோ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சான்ட்ராவை "நடிப்பு அரக்கி" என்று கிண்டல் செய்யும் ரசிகர்களின் பதிவுகளை பகிர்ந்துள்ளார். இதுவும் சமூக வலைதளங்களில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. சிலர் ரம்யா ஜோவுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்; மற்றவர்கள் "பிக் பாஸ் முடிஞ்சாலும் நாடகம் முடியல" என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

ரசிகர்கள் கருத்து
இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். "வீட்டுக்குள்ள நடக்குறது வீட்டுக்குள்ளயே முடிஞ்சிருக்கணும்", "வெளியே வந்த பிறகும் இதே சண்டையா?" என்று பலர் விமர்சிக்க, சிலர் "உண்மையை சொல்லுறாங்க" என்று போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும் பேசுகிறார்கள்.
மொத்தத்தில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்த பிறகும் போட்டியாளர்களின் மோதல்கள் இணையத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சான்ட்ரா - ரம்யா ஜோ இடையிலான இந்த வார்த்தைப் போர் இன்னும் எத்தனை நாள்கள் நீடிக்கப்போகிறது என்பது தான் இப்போது ரசிகர்களின் கேள்வியாக மாறியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications