அசீம் செய்த செயலை சொல்லி கிழித்து தொங்கவிட்ட விக்ரமன்..இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தானாம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 45 வது நாளில் இன்றும் பிக் பாஸ் நீதிமன்றம் டாஸ்க் நடந்து வருகிறது.
இந்த டாஸ்க் அசீம் மற்றும் ஏடிகே இடையே ஏற்பட்ட சாவி பிரச்சனை விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஏடிகே சார்பாக விக்ரமன் அசீமை கேள்வி கேட்டு வருகிறார்.

ஏ டி கே வின் தீர்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்த பல திருப்பங்களோடு தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் சண்டை சச்சரவுகள் நடந்து வந்தாலும் தற்போதைய நீதிமன்ற டாஸ்க் ரசிகர்கள் பலரும் அதிகமாக எதிர்பார்த்து வந்த டாஸ்க் தான். ஏடிகே நேற்று எபிசோடில் நீதிபதியாக இருந்து விக்ரமன் மீது அமுதவாணன் வைத்த குற்றசாட்டுக்கு தீர்ப்பு சொல்லியிருந்தார். தன்னுடைய தீர்ப்பில் உறுதியாக இல்லாவிட்டாலும் கடைசியில் இரண்டு பக்கமும் சரிதான் என்று கூறி விக்ரமனை குற்றம் அற்றவர் என்று கூறி இருந்தார்.

மீண்டும் தொடங்கிய பழைய பஞ்சாயத்து
இந்த நிலையில் 45 ஆவது நாளாகிய இன்று அசீம் ஏடிகே இடையே அரசவை டாஸ்க் சாவி பிரச்சனை ஏற்பட்டதை குறித்து இன்று விசாரிக்கப்படுகிறது. அந்த டாஸ்க் ஏடிகேயால் கதிர் காலில் விலங்கு போட்டிருக்கும் சாவியை எடுத்து அசீம் மறைத்து வைத்திருந்தார். இதைக் குறித்து ஏடிகே மற்றும் அசீம் இடையே பெரும் பிரச்சனையும் சண்டையும் ஏற்பட்டு இருந்தது. அதில் ஏடிகே அசீமை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டி இருந்தால் இதைக் குறித்து கமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஏடிகேயை திட்டி இருந்தார். தற்போது அதே பஞ்சாயத்து இன்று நடக்க இருக்கிறது.

விக்ரமனின் கேள்வி
நடந்து வரும் நீதிமன்ற டாஸ்க்கில் ஏடிகே. சார்பாக விக்ரமன் ஆஜராகி வாதாடுகிறார் .அதுபோல அசீமுக்கு ஆதரவாக ஷிவின் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார். சாவி எடுத்து வைத்தது என் சீக்ரெட் டாஸ்கின் ஸ்ட்ராட்டஜி தானே தவிர ஏடிகே மீது எனக்கு சுய கால் புணர்ச்சி கிடையாது என்று அசீம் தரப்பு நியாயத்தை ஷிவின் எடுத்துரைக்கிறார். அதற்கு விக்ரமன் சாவியை எடுத்து ஒளித்து வைப்பது என்ன ஸ்டேட்டர்ஸி ஒரு மனுஷன் காலில் விலங்கு போட்டு வைத்திருக்கிறது. ஒரு மனிதாபி மனத்தோடு நாம் நடந்து கொள்ள வேண்டும் காலில் இருக்கும் விலங்கை கழற்ற வேண்டும் யாரிடமாவது சாவியை எடுத்து வைத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கேட்டாரா? இல்லையா? என விக்ரமன் கேட்கிறார்.

இந்த வாரம் வெளியேறுபவர்
விக்ரமன் கேள்விக்கு ஆமாம் நிச்சயமாக கேட்டார் என்று பதில் சொல்கிறார் அசீம், அப்படி கேட்கக்கூடிய நபர் அந்த சாவி வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்வாரா? என்று கேட்க இந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று சரியான சம்பவம் நடைபெறுகிறது என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வார ஓட்டுகளின் அடிப்படையில் ராம் கடைசி இடத்தில் இருக்கிறார். அவர்தான் இன்றைய டாஸ்கின் நீதிபதியாக இருக்கும் நிலையில் இவருடைய பெர்பார்மன்ஸ் சிறப்பாக இருந்தால் இவருக்கு ஓட்டுகள் இன்னும் அதிகமாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ராமை தொடர்ந்து அதற்கு அடுத்ததாக ராபர்ட் மாஸ்டர் இருக்கிறார். ஏற்கனவே ரட்சிதாவும் ராபர்ட் மாஸ்டர் சிறப்பாக விளையாடவில்லை என்றால் வெளியேறலாம் என்று கருத்து கூறியிருக்கும் நிலையில் இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்பது இந்த வார விளையாட்டு அடிப்படையில் தெரியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications