
மொத்த கோபத்தையும் விக்ரமன் மீது கொட்டும் தனலட்சுமி..விக்ரமன் செய்த செயல்..பிக் பாஸ் கொடுத்த தீர்ப்பு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் டாஸ்க்கில் தனலட்சுமி இதுவரைக்கும் விக்ரமன் மீது தனக்கு இருந்த கோபத்தை மொத்தமாக முகத்துக்கு நேராக திட்டி இருக்கிறார்.
தனலட்சுமிக்கு துணையாக ஆயிஷா பேசிக் கொண்டிருப்பதை சட்டை செய்யாமல் விக்ரமன் செய்த செயல் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோபியை பிரிக்க இனியா செய்த சூழ்ச்சி..தெரிந்து கொண்ட ராதிகா.. கதறி அழும் பாக்யா.. திடீர் திருப்பங்கள்

இந்த வார டாஸ்க் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க்தொடங்கப்பட்டு வருகிறது . இந்த வார வீக் என்ட் டாஸ்காக போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து ஒரு அணியினர் ஏலியன்ஸ் ஆகவும் இன்னொரு அணியினர் பழங்குடியினராகவும் மாறி விளையாடி வருகின்றனர். இவர்களில் பழங்குடியினர் அணியில் இருக்கும் விக்ரமன், ஏலியன்ஸ் இருக்கும் வீட்டிற்குள் செல்கிறார். அவரை எப்படியாவது கோபப்படுத்தி விட வேண்டும் என்று ஏலியன்ஸ் ஆக இருக்கும் தனலட்சுமி, ஆயிஷா, அமுதவாணன், மணிகண்டன், குயின் சி என அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் விக்ரமன் சிரித்தபடியே இருக்கிறார்.

பழிவாங்க தொடங்கிய தனலட்சுமி
நேற்றைய டாஸ்க்கில் தனலட்சுமியை பழங்குடியினர் அணியில் இருந்த விக்கிரமன், அசீம் என எல்லாரும் சேர்ந்து எவ்வளவோ பேசியும் கோபப்படுத்த முடியாததால் இன்று அதையும் சேர்த்து விக்ரமனை கோபப்படுத்தி விட வேண்டும் என எவ்வளவோ தனலட்சுமி முயற்சி செய்திருக்கிறார். நேற்று தனலட்சுமி அனைத்தையும் சிரித்தபடியே கடந்திருந்தார். இதை பார்ப்பதற்கு அதிசயமாகத்தான் இருந்தது. விளையாட வேண்டும் என்றாலே அங்கே ஒரு அழுகை, ஆர்ப்பாட்டமும், கோபமும் பட்டுவிடும் தனலட்சுமி நேற்று டாஸ்க்காக வந்த கோபத்தை எல்லாம் அடக்கி வைத்திருந்தார். ஆனால் இன்று அதை விக்ரமனிடம் காட்டி பழிவாங்க தொடங்கி இருக்கிறார்.

தனலட்சுமியின் கேள்வி
இதுவரைக்கும் விக்ரமன் மீது இருந்த கோபத்தை இன்று டாஸ்கின் மூலமாக விக்ரமனின் முகத்துக்கு நேராக அமுதவாணனும் தனலட்சுமியும் போட்டி போட்டு கேட்டு வருகின்றனர். அதிலும் ஹைலைட்டாக தனலட்சுமி தன்னுடைய தலையில் இருந்த ஹெல்மெட்டை கழட்டி வீசி, பயங்கர எக்ஸ்பிரஷன் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் விக்ரமன் எதையும் கண்டு கோபப்படாமல் சிரித்தபடியே இருக்கிறார். தனலட்சுமி விக்ரம் இடம் என்னை பார்த்து நீங்க எப்படி மானம் இல்லையா? என்று கேட்டீங்க, நான் எவ்வளவு டிப்ரஷன் ஆனேன் என்று உங்களுக்கு தெரியுமா? என கத்தி பேசுகிறார்.

விக்ரமனின் சிரிப்பு
அடுத்ததாக அமுதவாணன் இப்ப மட்டும் உங்களுடைய பகுத்தறிவு எங்கே போச்சி?என கேள்வி கேட்க, தயவுசெய்து போங்க இங்க இருக்காதிங்க அண்ணன், தயவு செய்து இங்கே இருக்காதிங்க வெளியே போங்க, என தனலட்சுமி கத்தியப்படியே தலையில் இருக்கும் ஹெல்மெட் மற்றும் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டி வீசுகிறார். அப்போது அருகில் இருக்கும் ஆயிஷா நீங்க இதுவரைக்கும் ஒரு மாஸ்க் போட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்கீங்க நான் ரொம்ப நல்லவன், நியாயமானவன் என்று இருக்கீங்க என சொல்லிக் கொண்டிருக்க விக்ரமன் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அதற்கு தனலட்சுமி சிரிக்காதீங்க நீங்க இப்படி சிரிக்காதீங்க என்ன கத்திக் கொண்டிருக்கும்போது பிக் பாஸ் ஹாரண் அடித்து விடுகிறது. இந்தப் ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.