கைகலப்பாக மாறிய பிக் பாஸ் வீடு... முடிக்கப்பட்ட விளையாட்டு.. இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் இவரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று 53வது நாளில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே வாக்குவாதம் முற்றி கை கலப்பில் முடிந்திருக்கிறது.
அமுதவாணன் மற்றும் கதிரவன் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் அசீம் உள்ளே புகுந்து சண்டையிட்டு கடைசியில் டாஸ்கை மொத்தமாக முடிக்கப்பட்டு இருக்கிறது.

அடிமையாக மாறிய அசீம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொடங்கிய முதல் நாளில் இருந்து பிரச்சனைகள் பஞ்சமில்லாமல் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஏலியன்ஸ் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் விளையாடி வருகின்றனர் .அதில் இன்று பழங்குடியினர் அணியில் இருக்கும் அசீம் மற்றும் ஏலியன்ஸ் அனியில் இருக்கும் அமுதவாணன் இடையே கடும் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்திருக்கிறது. இன்றைய டாஸ்க்கில் ஏலியன்ஸ் வீட்டுக்குள் பழங்குடியினராக இருக்கும் அசீம் வந்திருந்தார். அவரை ஏலியன்ஸ் சிரிக்க வைத்து தன்னுடைய அடிமையாக மாற்றி விட்டனர் .அதற்கு முன்பு ஏற்கனவே கதிரவன் அடிமையாக தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று கதிரவன் வெளியே தப்ப முயலும் போது அமுதவாணன், கதிரவனை கீழே தள்ளி பிடித்துக் கொள்கிறார். அப்போது அங்கே வந்த அசீம் அமுதவாணன் இடம் சண்டை போட்டு கதிரவன் கையை அவிழ்த்து விடுகிறார்.

கன்னத்தில் கை வைக்கலாமா
கதிரவன் அமுதவாணனிடம் இப்படி அடித்து விளையாடலாமா? கீழே தள்ளும் போது எனக்கு அடிபட்டி இருந்தால் என்ன ஆவது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்க, இதை சரியாக கவனிக்காத அமுதவாணன் என்னது அடித்து விளையாடனுமா? வா அடிக்கலாம் வா அடிக்கலாம் என கதிரவனோடு சண்டையிட்டுக் கொண்டிருக்க அசீம், கதிரவன் மற்றும் அமுதவாணன் இடையில் நின்று கொண்டு என்னை அடித்து பாரு என அமுதவாணனிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அமுதவாணன் நான் உன்னிடம் பேசவில்லை நீ எதற்கு இடையில் வருகிறாய். நான் கதிரிடம் பேசுகிறேன் என கதிரோடு பேசிக் கொண்டிருக்கவும் என்னை அடித்து பார் என்று கையைப் பிடித்து, கன்னத்தை திருப்பி என்னை அடி என சொல்லிக் கொண்டிருக்க அமுதவாணன், நீ எப்படி என்னுடைய கன்னத்தில் கை வைக்கலாம் என அசீமோடு சண்டையை தொடங்கி விடுகிறார்.

தனலட்சுமியின் வருத்தம்
அசீம் ஒரு பக்கம் நீ என்னை அடித்து பாரு!? என்ன அடி, என்ன அடி என்று கத்தி கொண்டு இருக்க, அமுதவாணன் நீ எப்படி என்னை அடிக்கலாம் என கத்திக் கொண்டிருக்கின்றார். இவர்களுக்கு இடையில் பலர் சமாதானம் செய்தாலும் இவர்கள் இருவரும் கண்டு கொள்ளவில்லை. கதிரவன் ஒரு பக்கம் இந்த விளையாட்டு சரி இல்லை. எப்படி அடித்து விளையாடலாம்? என அமுதவாணனை பற்றி குறை கூறி கூறிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் விளையாட்டு முடிக்கப்பட்டு விட்டது. இதனால் காண்டான தனலட்சுமி அசீம் நடந்துகிட்டது ரொம்பவே தப்பு. அமுதவாணன் செஞ்ச தப்புக்கு நாங்க மன்னிப்பு கதிரவனிடம் கேட்டு விட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

இருதரப்பட்ட கருத்துக்கள்
அமுதவாணன் மற்றும் அசீம் இடையே நடந்த சண்டையில் அசீம்க்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா? என்று பலர் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். கன்னத்தில் கை வைத்தது தவறு தானே என்று பலர் கேள்வி எழுப்பி வரும்போது, அமுதவாணன் கதிரவனை கீழே தள்ளியது தவறு தானே? கீழே தள்ளி முதலில் கதிரவனிடம் அடி என்று சொன்னது அதனால் அமுதவாணனுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று இன்றைய ப்ரோமோவுக்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. இதைக் குறித்து கமல் இந்த வாரம் என்ன பேச போகிறார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications