விக்ரமனை பற்றி "அந்த” வார்த்தை கூறிய தனலட்சுமி.. எல்லாம் அதுக்காக தானா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் "சிம்ப்ளி வேஷ்ட்" என தனலட்சுமி கூறியிருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு பிடிக்காத நபர் விக்ரமன் தான் என தனலட்சுமி கூறியிருக்கிறார். அதை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

லைவில் பேசிய வார்த்தை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை அடிக்கடி கமல் உச்சரிக்கும் நிலையில் தான் இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தது. ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு போட்டியாளராக இருந்த தனலட்சுமி திடீரென வெளியேற்றப்பட்டார். ஆனால் வெளியேறிய பிறகு ஒரு சில வாரங்களாக வெளியே தலை காட்டாமல் இருந்த தனலட்சுமி நேற்று முதல் முறையாக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வமான பக்கத்தில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது தனலட்சுமி தனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பிடிக்காத நபர் என்றால் அது விக்ரமன் தான் என்று கூறியிருந்தாராம். அதை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களையும், கேள்விகளையும் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

நம்பும்படி இல்லையாம்
பிக் பாஸ் வீட்டிற்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான முறை தனலட்சுமிக்காக அனைத்து போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தது விக்ரமன் தான். அதுவும் குறிப்பாக முதல் முறையாக நடைபெற்ற பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமிக்கு கடைசி வரைக்கும் ஆதரவாக இருந்தவர் விக்ரமன் தான். தனலட்சுமி பொம்மை டாஸ்க்கில் ஷெரினாவை தள்ளி விடவில்லை என்று தன்னுடைய கருத்தை உறுதியாக கூறி முதல் முறையாக குறும்படம் வெளியிட்டதும் தனலட்சுமி ஓடி சென்று விக்ரமனை தான் கட்டிப்பிடித்து தன்னுடைய பாசத்தை காட்டினார். ஆனால் அதே தனலட்சுமி தனக்கு இப்போது விக்ரமனை பிடிக்கவில்லை என்று கூறுவது நம்பும்படி இல்லை என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மறந்து போச்சா தனலட்சுமி
இன்னும் ஒரு சில ரசிகர்கள் அசல் கோலாறு உடன் தனலட்சுமிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிடும் போது அனைத்து போட்டியாளர்களும் தனலட்சுமியை தான் அமைதியாக இருக்கும் படி கூறினார்கள். ஆனால் விக்ரமன் மட்டும்தான் தனலட்சுமி பாதிக்கப்பட்டவர் அவருக்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய குரலை உயர்த்தி பேசி அசல் கோலாருடன் சண்டை இட்டார். அதுபோல அசீம் உடன் தனலட்சுமிக்கு சண்டை ஏற்படும் போது நீ எல்லாம் ஒரு பெண்ணா? என அசீம் கேட்கும் போதும் அசீம் பேசுவது தவறு என்று சண்டையிட்டது விக்ரம் தான். ஆனால் தனலட்சுமி அதை எல்லாம் மறந்து விட்டாரா? என்று சில ரசிகர்கள் நினைவுபடுத்துகின்றனர்.

யாரு சிம்ப்ளி வேஸ்ட்
அதுமட்டுமல்லாமல் பொம்மை டாக்ஸ்கில் தனலட்சுமி கையை வைத்து தள்ளியதை குறித்து தனலட்சுமி என்னை எந்த இடத்தில் அவர் பிடித்து தள்ளினார் என தெரியுமா? என கேட்கும் போது, தனலட்சுமிக்கு ஆதரவாக விக்ரம் தான் ஒரு பெண்ணை இப்படி எல்லாம் செய்வது தவறு, அதுவும் நீங்கள் கைவைத்து தள்ளுனது சரியில்லை என்று விக்ரமன் கருத்து கூறி முதல் முதலாக விக்ரமனுக்கும் அசீமுக்கும் சண்டை ஏற்படுவதற்கு காரணமே தனலட்சுமி தான். ஆனால் இப்போ விக்ரமன் தான் "சிம்ப்ளி வேஸ்ட்" என்று தனலட்சுமி கூறி இருக்கிறார்.

இந்த கருத்துக்கு காரணம் இதுதானா
இதை குறித்து மீம்ஸ்களும் பல்வேறு நெகடிவ் கருத்துகளும் தனலட்சுமிக்கு எதிராக வலம் வருகிறது. தனக்கு பிடித்த போட்டியாளர் அசீம் தான் என தனலட்சுமி குறிப்பிட்டு இருப்பது அசீம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியில் இவர் என்ன டபுள் கேம் விளையாடுகிறார். வெளியே வந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அசீமுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால்தான் இப்படி அசீம் பக்கத்தில் பேசுகிறாரா? எதற்காக தான் இத்தனை நாட்கள் வெளியே வராமல் இருந்தாரா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி சமூக வலைத்தளத்தில் தனலட்சுமியை அதிகமானோர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications