Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த அசீம் ரசிகர்..அசீமின் திருமண வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுத்த காஜல்

பிக் பாஸ் அசீம் பற்றி காஜல் பசுபதி பேசியதற்கு காஜல் பசுபதியின் முன்னாள் கணவரை பற்றி சில நெட்டிசன்கள் கலாய்த்ததை தொடர்ந்து காஜல், அசீம் திருமண வாழ்க்கையைப் பற்றி சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 அசீம் பற்றி தொடர்ந்து காஜல் பசுபதி பல்வேறு கேள்விகளையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னர் ஆக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆரம்பத்தில் இருந்து காஜல் பசுபதி தவறு என்று கூறி வருகிறார்.

இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக விக்ரமன் அல்லது ஷிவினாக இருக்க வேண்டும் அதுதான் சரியாக இருந்திருக்கும் என்று தன்னுடைய எதிர்பார்ப்பையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் காஜல் பசுபதி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் அசீமுடைய ரசிகர்கள் சிலர் காஜல் பசுபதியின் சொந்த வாழ்க்கையை பற்றி சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்ப அதற்கு காஜல் பசுபதி அசீம் உடைய திருமண வாழ்க்கையை குறித்து கேள்வி எழுப்பி பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

காஜல் பசுபதியின் விருப்பம்

காஜல் பசுபதியின் விருப்பம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது சரியான முன் உதாரணம் கிடையாது என்று ஆரம்பத்தில் இருந்தே அசீமிற்க்கு எதிராக காஜல் பசுபதி பல்வேறு தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து பெண்களுக்கு எதிராக அசீம் பேசியதை தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக விக்ரமன் அல்லது ஷிவின் வந்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும் என்று தன்னுடைய கருத்தையும் அவ்வப்போது அதில் தெரிவித்து இருக்கிறார்.

காஜல் கேள்வி

காஜல் கேள்வி

பிக் பாஸ் கிராண்ட் பினாலே அன்று கூட அசிம் தான் டைட்டில் வின்னர் என்ற தகவல்கள் வெளியானதும் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அசீமிற்க்கு எதிராக வெளியான பதிவுகளை பகிர்ந்து கொண்டே இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காஜல் பசுபதியை சமூக வலைத்தளத்தில் அதிகமாக திட்டி கொண்டிருந்தனர். சில நெட்டிசன்கள் காஜல் பசுபதியை பார்த்து அதான் உன் புருஷன் உன்னை விட்டுட்டு போயிட்டான்டி என்று சில கெட்ட வார்த்தைகளையும் அதில் பயன்படுத்தி இருக்கின்றனர். எப்போதுமே நெகட்டிவ் கருத்துக்களை கண்டு கொள்ளாமல் அதை அப்படியே சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பதிலாக கூறும் காஜல் பசுபதி இந்த முறையும் அதற்கு காப்பி பேஸ்ட் செய்யும் நாய்களா உன் மக்கள் நாயகன் அசீமை ஏன் அவன் பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அசீம் அறிவுரை

அசீம் அறிவுரை

அசீமிற்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்கள் முன்புதான் அசீம் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கருத்துக்களை தான் கண்டு கொள்வதே இல்லை என்றும் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கருத்துக்களை கண்டு கொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காஜல் பசுபதியின் ட்விட் அதிகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நம்ப முடியாத கேள்வி

நம்ப முடியாத கேள்வி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமனை காஜல் பசுபதி தான் பேட்டி எடுத்திருந்தார். அப்போது கூட அசீமிற்கு எதிராக பல விஷயங்களை கூறிய காஜல், விக்ரமன் எப்படி இந்த சீசனில் தோற்றார் என்று விக்ரமனிடமே ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அது மட்டும் அல்லாமல் ரசிகர்களின் முன்னிலையில் எனக்கு விக்ரமன் தோற்றால் கூட பரவாயில்லை ஆனால் ஷிவின் ஜெயித்திருக்கலாம். எப்படி அடுத்தவர்களை திட்டி அடாவடியாக ஆடி மற்றவர்களை இழிவு படுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா? என்று தன்னுடைய கேள்வியையும் அந்த வீடியோவில் கேட்டிருந்தார் .தற்போது அதையும் ரசிகர்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+