ரச்சிதா உடன் "அப்படி பழக காரணமே இதுதான்”...முதல் முறையாக மனம் திறந்த ராபர்ட்.. இப்படி உளறிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் அவரோடு போட்டியாளராக இருந்த ரச்சிதாவிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா கூட பழகி வருவதை குறித்து பல நெகட்டிவ் கருத்துகள் பரவி வந்த நிலையில் தன் தரப்பு கருத்தை முதல் முறையாக கூறி இருக்கிறார்.

இதுதான் மிஸ் பண்ணுவதோ

இதுதான் மிஸ் பண்ணுவதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா உடன் பழகி வந்ததை குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களும் வெளியே இருப்பவர்களும் அதிகமாக கலாய்த்து வந்தனர். ஆரம்பத்திலிருந்து எனக்கு வெளியே ஒரு காதலி இருக்கிறார் என்று கூறி வந்தார். ஆனாலும் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தார். அதனால் தான் என்னவோ ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய பிறகு கூட ரச்சிதா இங்கே 62 கேமரா இருக்கிறது. ஆனால் 63வது கேமராவாக நான் எங்கே இருக்கிறேனோ அங்கேயே பார்த்தபடியே ராபர்ட் இருப்பார். நான் தாகமாக இருக்கிறது என்று நினைத்ததும் தண்ணீரோடு வந்து நிற்பார். அதுபோல் கால் வலிக்கிறது என்றால் சேர் உடன் வந்து இருப்பார். அவர் இல்லாததை நினைத்து வருத்தத்தை பகிர்ந்து இருந்தார்.

பார்த்ததும் பிடித்து போச்சி

பார்த்ததும் பிடித்து போச்சி

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு ரட்சிதாவோடு தான் நெருங்கி பழகுவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி ராபர்ட் மாஸ்டர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். அதில் தான் ஒருமுறை டிவி சீரியல் மாற்றி பார்க்கும் போது அங்கே ரச்சிதாவை பார்த்தாராம். அப்போது அவர் ரொம்பவே அழகாக இருக்கிறாரே என்று சில நிமிடங்கள் இவரையே பார்த்த வண்ணமாகவே இருந்தாராம். அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததும் இவருக்கு இவரை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாம். அது கிரஷ் மட்டும் தான். அதனால் காதல் என்று ஒன்றுமில்லை நான் எப்போதும் ரச்சிதாவிற்காக ஹெல்ப் ஆகத்தான் இருந்தேன் என்று கூறி இருக்கிறார்.

காதல் விஷயம் தெரியும்

காதல் விஷயம் தெரியும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ரச்சிதாவிற்கு என்னுடைய காதல், என்னுடைய காதலி எந்த ஊரில் இருக்கிறார் என்று எல்லா தகவலும் தெரியும். நான் எல்லாத்தையும் மனம் விட்டு பேசி இருக்கிறேன். எனக்கு அப்போது மட்டும் அவர் கிரஷ் அல்ல எப்போதுமே என்னுடைய கிரஷ் ஆக ரச்சிதா இருப்பார் என்று கூறியிருக்கிறார். அதுபோல ரச்சிதா வந்து எல்லா போட்டியாளர்கள் போல இல்லை. எனக்கு இவர் வித்தியாசமாக இருந்தாலும் அவருக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. அதை நான் கெடுத்து விடக்கூடாது என்பதையும் கவனம் வைத்து இருக்கிறேன். அதனால் தான் அத்தனை பேர் வரிசையாக நின்று கொண்டு நான் வெளியே செல்லும்போது எனக்கு கட்டிப்பிடித்து வழி அனுப்பி வைத்தாலும் நான் ரச்சிதாவின் பக்கத்தில் செல்லவில்லை ரச்சிதா தான் எனக்கு கை கொடுத்தார்.

இன்னும் எதையும் பார்க்கவில்லையாம்

இன்னும் எதையும் பார்க்கவில்லையாம்

ரச்சிதா எனக்கு கை கொடுத்த பிறகு நானும் லேசாக கொடுத்தேன். அவருடைய மதிப்பு அங்கே தான் இருக்கிறது அதோடு முடிந்து விட்டது. அங்கே அந்த இடத்தில் எனக்கு நேரம் போக வேண்டும் அதற்காக சில நேரங்களில் நான் அவரோடு பேசிக் கொண்டிருப்பேன். டாஸ்க் நேரத்தில் நான் டாஸ்கில் கவனத்தை செலுத்துவேன். நேரம் போக வேண்டும் என்பதற்காக ரட்சிதாவோடு பேசிகிட்டு இருப்பேன் .ஆனால் அதை வெளியில் இருந்து பார்க்கும்போது ரொம்பவே தவறாக காட்டப்படுவது போல எனக்கு தோன்றுகிறது. நான் இன்னும் நிகழ்ச்சியை பார்க்கவில்லை. எனக்கு டைம் இல்லை அதனால் இதை பார்க்கவில்லை. பார்த்த பிறகு தான் எப்படி காட்டியிருக்கிறார்கள் என்பது எனக்கு புரியும் என்று கூறியிருக்கிறார். அதுபோல ராபர்ட் வெளியே வந்த அடுத்த நாள் ரச்சிதா ஃபீல் பண்ணுவதை பார்க்கும் போது ஒரு மாதிரி இருந்தது என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+