எனக்கு PR டீம் இருக்கிறது..பிக் பாஸ் வீட்டிற்குள் இதுதான் நடக்கிறது..ரகசியங்களை உண்மையை உளறிய ஷிவின்
பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும் போது எனக்காக என்னுடைய தோழி தான் என்னுடைய PR டீமாக வேலை செய்தார் என்று ஷிவின் கூறி இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் PR டீம் உதவியோடு செயல்பட்டதாக அதிகமான குற்றச்சாட்டுகள் குவிந்து வந்தது.
இந்த நிலையில் தனக்கு PRஆக தன்னுடைய தோழி செயல்பட்டு இருக்கிறார் என்று பல்வேறு தகவல்களையும் ஷிவின் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் ஜெயித்தது PR உதவியோடு என்று நெட்டிசன்கள் கருத்துக்கூறி வரும் நிலையில் தற்போது ஷிவின் கூறிய பதில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

திருநங்கை போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீசன் இதுவரைக்கும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிடும் நபராகத்தான் இருக்கும். ஆனால் இந்த சீசனில் டைட்டில் வின்னராக ஜெயித்தது கடைசி நேரத்தில் நடந்த எதிர்பாராத நிகழ்வாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சீசனில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து அறிமுகமானார். அவரை தொடர்ந்து இந்த சீசனில் ஷிவின் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவருடைய அறிமுகம் மற்றும் கேரக்டரை பார்த்த ரசிகர்கள் பலர் இவரை இப்ப வரைக்கும் பாராட்டி வருகின்றனர்.

பெற்றோர்களின் பார்வை
திருநங்கைகள் மீது பொதுப்படையாக மக்கள் பலருக்கும் இருக்கும் கருத்துக்களை ஷிவின் இந்த நிகழ்ச்சியின் மூலமாக மாற்றிவிட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவினுடைய வாழ்க்கை மாறி இருக்கிறதோ இல்லையோ இந்த நிகழ்ச்சியில் இவரை பார்த்து பல வீட்டில் பெற்றோர்களுக்கு திருநங்கைகள் மீதான பார்வை மாறி இருக்கிறது என்று தற்போது அவரே கூறி இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ப்ரீஸ் டாஸ்க்கில் இவருடைய தோழி உள்ளே வந்திருந்தார். அப்போது அவர் வேலை செய்யாமல் நான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கிறேன் என்று அறையும் குறையுமாக பேசியதை குறித்து தற்போது விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

தோழி கூறியது உண்மைதான்
எனக்கு சமூக வலைத்தளத்தில் எதுவும் பெரிய அளவில் தெரியாது. நான் வேலைக்கு சென்று வருவேன் அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது. ஆனால் என்னுடைய அனைத்து சமூக வலைத்தள பக்கங்களையும் ஹண்டீல் பண்ணுனது என்னுடைய தோழி தான். அதுமட்டுமல்லாமல் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எனக்கு டிரஸ் அரேஞ்ச் பண்ணி தருவது, எனக்கான பொருள்கள், என்னுடைய தேவைகள் எல்லாம் பார்த்துக் கொண்டது என்னுடைய தோழிதான். அவர்தான் என்னுடைய பி ஆர் ஆனால் பலர் சொல்வது போன்று என்னுடைய தோழி எனக்கு இல்லை. எனக்கு அவர் பொது வெளியில் வந்து ஓட்டு செலுத்தி அந்த மாதிரி உதவி செய்தது கிடையாது. ஆனால் எனக்கு நிஜ வாழ்க்கைக்கு தேவையான பல உதவிகளையும் என் தோழி தான் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

புதிய வாய்ப்புகள்
PRக்கு சம்பளம் கொடுத்து வேலை செய்யும் வகையில் என்னிடம் பணம் இருந்தால், நான் எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்? நான் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த மாதிரி ஜாலியாக ஏதாவது செய்து கொண்டு இருந்திருக்கலாம்.இந்த நிகழ்ச்சிக்கு வந்து தற்போது தனக்கு ஒரு சில வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் . ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் இவரும் சிறப்பு விருந்தினராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இனி என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. தான் சூட்டிங் போன இடத்தில் கூட பலர் தனக்குத் தரும் ஆதரவை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications