விக்ரமன் செய்த "அந்த” செயலை வெளியே காட்டவில்லை.. எதிர்பார்க்காத குற்றச்சாட்டுகளை வைத்த ஆயிஷா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விட்டு கடந்த வாரம் ஆயிஷா வெளியேறிய நிலையில் அந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதை பற்றி பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல விஷயங்கள் வெளியே காட்டப்படுவதில்லை என்று பல போட்டியாளர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிஷா இப்போது அடுக்கடுக்காக பல உண்மைகளை கூறியிருக்கிறார்.

அசீமோடு ஏற்பட்ட சண்டை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகையான ஆயிஷா ஒரு போட்டியாளராக அறிமுகமான முதல் நாளில் இருந்து சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்து வந்தார். ஆரம்பத்தில் தன்னுடைய விளையாட்டை விளையாடுகிறேன் என இவர் விளையாட இவரை எதிர்த்து அசீம் இவரோடு சண்டையிட்ட போது இவர் கடந்த முதல் சீசனில் கலந்து கொண்டிருந்த ஓவியாவை போலவே இவரும் நடந்து கொள்வதாக பலர் கருத்து தெரிவித்தனர். அசீம் மற்றும் ஆயிஷா இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவு பார்த்து பலரும் ஆயிஷாவுக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து கொண்டு இருந்தனர்.

எழுந்த எதிர்ப்பு
அது மட்டுமல்லாமல் ஆயிஷா, கமல் இடம் என்னை தப்பாக வெளியே போர்ட்ரைட் செய்து விடாதீர்கள் சார் என்று ஆயிஷா கூறிய அந்த வார்த்தையை கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் கூட அதிர்ச்சி அடைந்தனர். கமல் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் எவ்வளவு பெரிய ஒரு நடிகர், திறமைசாலி அவரை இப்படி பொதுவெளி தளத்தில் என்னை வெளியே போர்ட்ரைட் செய்து காட்டி விடாதீர்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று இவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

உருவான ஆதரவுகள்
ஆனாலும் அதற்குப் பிறகு நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய விளையாட்டை நல்ல முறையிலே ஆயிஷா எடுத்து சென்று கொண்டிருந்தார். ஒரு சில வாரங்கள் ஆயிஷா விளையாட்டில் ஈடுபடாமல் தனியாக இருந்தாலும் அடுத்த வாரம் இவர் விளையாட்டில் பெர்பார்மன்ஸ் செய்து விடுகிறார். இவர் இப்படித்தான் என்று கணிக்க முடியாத லெவலில் இருந்த நிலையில் கடந்த வாரம் இவருடைய பெயர் நாமினேஷனில் இருந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்ததால் இவர் வெளியேறுவார் என்று அனைவருக்கும் தெரிந்தாலும் இவருடைய வெளியேற்றம் சரியானது அல்ல என்று இவருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

கைதட்டிய விக்ரமன்
ஆனால் அதே நேரத்தில் ஆயிஷாவின் பெயரை கமல் எடுத்துக்காட்டியதும் அதை முதலில் பார்த்த விக்ரமன் அவரை அறியாமல் கைதட்டி விட்டாராம். ஆனால் அதை குறித்து தான் கேட்டதற்கு நான் ஜனனி சேவ் ஆனதற்காக கைத்தட்டினேன் என்று கூறிக் கொண்டிருந்தார் என்று வருத்தத்தோடு ஆயிஷா பேசியிருக்கிறார். அன்றைய பிரமோவில் கூட ஆயிஷா விக்ரமனை பார்த்து புரியுது விக்ரமம் என்று சொன்னதை காட்டி இருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் அதே நாளில் இரவு மணிகண்டன், விக்ரமன் கைதட்டியதற்கு ஆயிஷா புரிகிறது என்று முகத்துக்கு நிகராகவே திட்டிவிட்டாள் என்று மைனாவிடம் கூறி கிண்டல் படித்துக் கொண்டிருந்தார்.

ஆயிஷாவின் குற்றச்சாட்டு
ஆனால் விக்ரமன் ஆயிஷா வெளியே செல்லும்போது கூட கேட்ட அருகில் வந்து நின்றும் நான் நீங்கள் வெளியே செல்வதற்காக கைதட்டவில்லை ஜனனி சேவ் ஆகிவிட்டால் என்ற நினைப்பு தான் கைத்தட்டி விட்டேன் என்று புரிய வைக்கும் போது அப்போதும் ஆயிஷா கண்டு கொள்ளாத மாதிரியே நடந்து கொண்டார் ஓகே ப்ரோ விடுங்க என்று கூறியிருந்தால் இத்தநிலையில் அந்த நேரத்தில் விக்ரமன் கைதட்டி சந்தோஷப்பட்டதை வெளியில் காட்டாமல் மறைத்து விட்டார்கள் என்று தற்போது ஆயிஷா குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications