ஜி.பி முத்து கிளம்பியதும் வில்லன் நடிகரை மீண்டும் அழைக்கும் பிக்பாஸ்.. இனி நிகழ்ச்சி களைகட்ட போகுது!
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஆரம்பமான இரண்டு வாரங்களுக்குள் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமும் பிரச்சனைகளும் களைகட்டி இருக்கிறது.
ரசிகர்களால் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஆதரவு கொடுக்கப்பட்டு வந்த ஜி பி முத்து இந்த நிகழ்ச்சியை விட்டு விலகியது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்து வருகிறது.
ஜிபி முத்து விலகியதும் அவருக்கு பதிலாக அவரைப் போலவே ஒரு நபரை களம் இறக்க வேண்டும் என்று பிக் பாஸ் முயற்சி எடுத்து வருகிறது.

முதல் வெளியேற்றம்
விஜய் டிவியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் முடவு பெற்றுவிட்டது. முதல் எலிமினேஷன் ஆக சாந்தி மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். 21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களால் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வந்த ஜி பி முத்து விலகி இருக்கிறார் .தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் ஜி பி முத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். இந்நிகழ்ச்சி அறிமுகமான முதல் நாளிலிருந்து இவருக்கு தான் அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர்.

ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்
ஜி பி முத்துவின் வெளியேற்றம் ரசிகர்களை அதிக அளவில் பாதித்திருக்கிறது. முதல் நாளிலிருந்து ஜிபி முத்து செய்த அட்ரா சிட்டிகளை ரசித்த ரசிகர்கள் இவருடைய வெளியேற்றத்தை ஏமாற்றமாக உணர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜி பி முத்துக்கு அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் அதிகரித்து இருந்தது. இவருக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருவதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

பிக் பாஸ்க்கு நெருக்கடி
ரசிகர்கள் பல பேருடைய நம்பிக்கையை தகடு பொடியாக்கி ஜி பி முத்து கிளம்பிவிட்டார். பிக் பாஸ் மற்றும் கமல் அனைவருமே எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஜிபி முத்து தன்னால் இங்கே இருக்க முடியாது என்று விடாப்பிடியாக கூறி கிளம்பி இருந்தார்.இதனால் இவரை போலவே ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு போட்டியாளரை களம் இறக்கினால் தான் ரசிகர்கள் கவர முடியும் என்று பிக் பாஸ்க்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே கடந்த இரண்டு சீசன்களில் அதிக அளவில் டிஆர்பி குறைந்ததால் இந்த சீசனில் டிஆர்பிஐ ஏத்தி விட வேண்டும் என்று தான் ஜிபி முத்துவை களம் இறக்கி இருந்தது. ஆனால் அவரும் விலகி விடவே தற்போது அவருக்கு பதிலாக பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆவதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகான் இந்த சீசனில் கலந்து கொள்வதாக பெயர் அடிபட்டு வந்தது. ஆனால் அவர் கடைசியில் கலந்து கொள்ளவில்லை தற்போது ஜி பி முத்து விலகிவிட்டதும் அவருக்கு பதிலாக மன்சூர் அலிகானை களம் இறக்கினால் டிஆர்பி அதிகரிக்கும் என்று பிக் பாஸ் முடிவெடுத்து இருப்பதாகவும், அதனால் மன்சூர் அலிகான் இடம் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் இப்போதே அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்பது பொறுத்து இருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications