பல்லை தட்டி கையில கொடுத்திடுவேன் ஆவேசமான வனிதா... கலவரமான பிக்பாஸ் வீடு
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா தற்போது நிரூப்பிடம் காரசாரமாக சண்டையில் தொடங்கியிருக்கிறார்.
நிரூப்பை பார்த்து வனிதா திட்டிய ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இருபத்தி மூன்றாவது நாள்
பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி தற்போது இருபத்தி மூன்றாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இங்கே சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் களைகட்டியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்க பட்டிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத அளவிற்கு அல்டிமேட் நிகழ்ச்சிகள் வெறித்தனமாக போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அல்டிமேட் போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகளை பஞ்சமில்லாமல் ஏற்படுத்துவதுதான் பிக்பாஸில் மாஸ்டர் பிளான் போல அதனால்தான் தினமும் போட்டியாளர்களுக்கு போட்டியை ஏற்படுத்தி வருகிறது.

வித்தியாசமான டாஸ்க்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது நான்கு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். மீதமிருக்கும் 10 போட்டியாளர்களுக்குள் தற்போது டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் 10 பேரும் இரண்டு அணியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். நிரூப் அணியை சார்ந்தவர்கள் வெள்ளை உடை உடுத்தியவர்கள் பேய்களாகவும், பாலா அணியைச் சேர்ந்த கருப்பு உடை உடுத்தியவர்கள் தேவதையாகவும் விளையாடி வருகிறார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் எந்த ஊரில் தேவதை கருப்பாகவும், பேய்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கும் என்று கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.

நான்காவது ப்ரோமோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் தேவதை மற்றும் பேய்களுக்கான விளையாட்டை பார்த்ததும் ரசிகர்கள் இன்று தரமான சம்பவம் இருக்கு என்று எதிர்பார்த்திருந்தனர். தற்போது அது போல தான் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த விளையாட்டில் தேவதைகள் அணியில் வனிதா இருப்பதால் அவரால் பேய்கள் அணியினர் செய்யும் செயல்களை பொறுமையாக அமைதியாகவும் இருக்க முடியாமல் தவித்து வருகிறார்.
ஏற்கனவே ஒவ்வொரு ப்ரோமோவிலும் வனிதாவின் அடாவடிகள் போட்டு காட்டி கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நான்காவது ப்ரோமோவிலும் நிரூப் மற்றும் வனிதாவின் இடையே காரசாரமான வாக்குவாதம் தொடங்கியிருக்கிறது.

வனிதா நிரூப் வாக்குவாதம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்கனவே பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் நிலையில் நீங்க இப்ப ஆல்ரடி பண்ணிக்கிட்டு இருக்கிற மாதிரி கொஞ்சம் இன்னும் வெயிட்டாக பண்ணுங்க என்று வனிதா கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு நிரூப், அதைத்தான் பண்ண மாட்டேன் என்கிறீர்களே.. நாங்க தேவதைகள் நாங்கள் இப்படித்தான் பண்ணுவோம் என்று வனிதாவை கலாய்த்துக் கொண்டு இருக்கிறார். அவருடைய எக்ஸ்பிரஸனை பார்த்ததும் காண்டான வனிதா என்ன எக்ஸ்பிரஷன் காட்டுற..!!?? பல்லைத் தட்டிக் கையில் கொடுத்து விடுவேன் என்று செம்ம கடுப்பில் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இடையில் தாமரைச்செல்வி எவ்வளவோ சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் பிரச்சனை இங்கே பூதாகரமாக வெடித்து கொண்டு இருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் அப்போ நிரூப் தானா?? அதற்காகத்தான் இப்படி பேசுகிறாரா?? என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications