போட்டியாளர்களின் திடீர் செயல்.. கதறி அழும் ஜூலி.. பிக் பாஸ் வீட்டிற்குள் திடீர் குழப்பம்
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 'உம் சொல்றியா அல்லது ஊகும் சொல்றியா' எனும் புது டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
Recommended Video
போட்டியாளர்களின் நடவடிக்கையால் ஜூலி கதறி அழும் ப்ரோமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அல்டிமேட் அணியின் சூப்பர் பிளான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியைப் பார்த்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன்று இந்த அல்டிமேட் நிகழ்ச்சிகளும் அதிக அளவில் ரசிகர்களை கவர்வதற்காக பல புதிய செயல்களை அறிமுகப் படுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் இதுவரைக்கும் 5 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான போட்டியாளர்களை களம் இறங்குவோம் என்று பிக் பாஸ் அல்டிமேட் அணி பிளான் செய்துள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றம்
இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்களில் தங்களுடைய பெயரை இழந்த போட்டியாளர்கள் மீண்டும் அதனை சரிசெய்து ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்று விட வேண்டும் என்று இதில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தாலும், முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி இருக்கிறார்கள். அனைவரும் ஆரம்பமான முதல் நாளில் இருந்து அதிகளவில் சண்டை போட்டு வருவது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஜாலியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

புதுவிதமான டாஸ்க்
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எட்டாவது நாளில் அடியெடுத்து வைக்கும் நேரத்தல் போட்டியாளர்களுக்கு இன்று புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'உம் சொல்றியா அல்லது ஊகும் சொல்றியா' என்னும் தலைப்பில் போட்டியாளர்களுக்கு பிடித்த சக போட்டியாளர்களின் கேரக்டர் மற்றும் அவர்களின் பிடிக்காத கேரக்டரை அனைவரும் கூறி வருகின்றனர். இங்கே சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் நேரத்தில் தங்களுக்கு பிடிக்காத கேரக்டரை சொல்கிறேன் என்று சக போட்டியாளர்களின் மனதினை பலரும் காயப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜூலியின் திடீர் அழுகை
ஏற்கனவே முதல்வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதை பார்த்ததும் அனிதா சம்பத் இன்று காலை போர்டில் நீதி வென்றது என்று எழுதி இருக்கிறார். இது தவறு என்று பாலாஜி முருகதாஸ் எடுத்துக் கூறியும், அனிதா என் மனதில் இருப்பதை நான் அப்படி தான் கூறுவேன் என்று விடாப்பிடியாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் தற்போதைய ப்ரோமோவில் ஜூலி கதறி அழுகிறார். அதை பார்க்கும் போது ரசிகர்கள் ஏற்கனவே எவ்வளவு கெட்ட பெயர் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவர் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், யாரோ இவருடைய மனதை அதிகமாக காயப்படுத்தி இருக்கின்றனர். அதனால் தான் ஜூலி இவ்வளவு அழுது கொண்டிருக்கிறார் என்று கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சிலர் இதுவும் ஒருவகை ரசிகர்களை கவரும் வகையாகத்தான் இருக்குமோ??என்று சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications