பிக்பாஸ் அல்டிமேட்:நிழலை வைத்து ஆட்டம் காட்டிய பிக் பாஸ்..மூன்று கேள்வியில் புரிந்து கொண்ட ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான ஐந்தாவது போட்டியாளருக்கான புதிய க்ளூ தற்போது வெளியாகி உள்ளது.
மூன்று கேள்விகள் கேட்டு ரசிகர்களுக்கு டக்கென்று நினைவிற்கு வரும் போட்டியாளரின் நிழல் படத்தை பார்த்து ரசிகர்கள் திகைத்துப் போய் இருக்கின்றனர்.

மீண்டும் கமல் தரிசனம்
பிக் பாஸ் அல்டிமேட் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்காக வழக்கம்போல தொகுப்பாளராக களம் இறங்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக தினமும் ஒரு ப்ரமோவில் வந்து ரசிகர்களை எங்கிரேஜ் படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இவர் பேசும் வார்த்தைகள் நிகழ்ச்சியை பார்க்க தூண்டிக் கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் போது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு க்ளூ கொடுத்து பிக்பாஸ் அல்டிமேட் வித்தியாசமாகப் ப்ரமோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஐந்தாவது போட்டியாளருக்கான ப்ரமோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

புது விதமான முயற்சி
இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும் என்று காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு கூறுவது போலத்தான் தற்போது ஐந்தாவது போட்டியாளர்களுக்கு அட்வடைஸ்மென்ட் கொடுத்திருக்கின்றனர். அதில் அடையாளம்....மூணுல வந்தவரு, முகினோட மோதுனவரு... வீட்டிலேயும் ஆடுவாரு, மேடையிலயும் ஆடுவாரு.. கண்ணாலே பேசுவாரு நேர்கொண்ட பார்வையால் பார்ப்பாரு..யாரு..அந்த ஹவுஸ் மேட் என்று கேள்விக்குறியோடு வித்தியாசமாக போஸ்ட் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் பலர் இது நம்ம அபிராமி தான் என்று அடித்துக் கூறி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு ப்ரமோ போட்டுக்கொண்டிருக்கும் போது இவருடைய வித்தியாசமான அட்வர்டைஸ்மெண்ட் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இவரும் சளைக்காதவர் தான்
ஏற்கனவே இதுவரைக்கும் பிக்பாஸ் அல்டிமேட் 4 போட்டியாளர்களின் ப்ரமோக்களை வெளியிட்டிருக்கும் நேரத்தில் அனைவருமே காரசாரமான விவாதத்துக்கு ரெடியாக இருக்கிறவர்கள். இவர்களுக்கு கொஞ்சமும் சலிக்காதவர் தான் அபிராமி என்று ரசிகர்கள் இப்போதே கூறிவருகின்றனர். ஏற்கனவே மூன்றாவது சீஸனில் வந்து அனைவரையும் வந்து பார் என தன்னுடைய தனித் திறமையால் கெத்து காட்டியவர் தற்போது மீண்டும் களம் இறங்குவதால் யாருக்கு பாதகம் யாருக்கு சாதகம் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

வேற லெவல் போட்டிதான்
ஏற்கனவே சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி என்று 4 போட்டியாளர்கள் போட்டி போட தயாராக இருக்கும் நிலையில் தற்போதும் ஐந்தாவதாக வரும் இவரும் அனைவருக்கும் டப் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய என்ட்ரி பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அவருடைய ப்ரமோ எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கு இந்த சீசன் அதிக அளவில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications