பிக்பாஸ் அல்டிமேட்: பாலாஜியின் அறிமுகம்... பாட்டாலே பதில் சொல்கிறாரே...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை: துவங்க இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய மேடை பர்பாமன்ஸ் செய்வற்காக ரெடியாகி இருக்கிறாராம்.
அவருடைய அறிமுகப்பாடல் பற்றிய விபரம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அறிமுகம்
விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி தற்போது ஐந்து சீசன்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்த அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் அதையே எதிர்பார்த்து தான் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் தங்களுடைய திறமையை காட்ட ரெடியாகி இருக்கின்றனர்.

ஜெயிக்கப்போவது யாராக இருக்கும்
இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளர்கள் தான் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் கலகலப்பும், கலவரமும் செய்து
பெயர் வாங்கிய ஒரு சில போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் அணி இறக்கி இருக்கிறது. இதில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரங்களையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

நான்காவது சீசன் ரன்னர்
அதிகமாக ரசிகர்கள் கூறிய அதே பெயர்களில் உள்ள போட்டியாளர்கள் தான் தற்போது பிக் பாஸ் உறுதியாக ப்ரமோக்களில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பலரும் எதிர்பார்க்கும் ஒரு போட்டியாளராக பாலாஜி முருகதாஸ் இருந்து வருகிறார். இவர் நான்காவது சீசனில் ரன்னராக இருந்தாலும், தன்னுடைய கெத்தான முரட்டுத்தனமான கேரக்டரால் அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். தற்போது மீண்டும் இவர் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது. எப்படியும் இந்த சீசனில் இவர் டைட்டில் ஜெயித்துவிட வேண்டும் என்று இப்போதே இவருக்காக ஆர்மிகளை தொடங்கி சப்போர்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

செம பாட்டில் அறிமுகம்
தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே பாலாஜி முருகதாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும், அவர் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் மேடை பர்பாமன்ஸ் பண்ணுவதற்காக சுல்தான் பட பாடல்களில் டான்ஸ் ஆடி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு என்னும் பாடலுக்கு இவர் டான்ஸ் ஆடி இருப்பதாகவும், அந்த டான்ஸ் சூட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும் அவருடைய ரசிகர்கள் இதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications