பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. அத இன்ஸ்டாகிராமே வேடிக்கை பார்க்குது.. சைத்ராவின் பழைய வீடியோ டிரென்ட்
சென்னை: பெண்கள் தினத்தையொட்டி பெண்களை போற்றும் விதமாக பணியிடங்களில் அவர்கள் ரிஸ்க் எடுத்து சாதிக்கும் வீடியோவை கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு... என்ற நிலை மாறி தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து வருகிறார்கள்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் ரிஸ்க் எடுத்து சாதனைகளை புரிந்து வருகிறார்கள். ராணுவம், கடற்படை, விமான படை, திரைத் துறை, கல்வித் துறை, என பெண்கள் இல்லாத இடங்களே இல்லை என சொல்லலாம்.

பெண்களின் சிறப்புகள்
பெண்களின் சிறப்புகளை போற்ற நேற்றைய தினம் தன்னார்வல அமைப்புகளும் அரசும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அது போல் சில பிரபலங்களும் பெண்கள் தினத்திற்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு, சாதனை பெண்கள் குறித்த விஷயங்களை தங்கள் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்தனர்.

கயல் சீரியல்
அந்த வகையில் கயல் சீரியலில் வரும் சைத்ரா ரெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேயாக நடிக்கும் பெண்கள் எத்தகைய ரிஸ்கை எடுக்கிறார்கள் என்பதை பெருமிதம் பொங்க வீடியோ போட்டுள்ளார்.

எந்த சீரியல்
இந்த வீடியோவில் வரும் இரு பெண்களுமே யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தவர்கள். இந்த வீடியோவும் அதற்காக எடுக்கப்பட்டது. அதில் இரவு நேரத்தில் சூட்டிங் நடைபெறுகிறது. நீல நிற சேலை கட்டிய சைத்ரா ரெட்டிக்கு எக்ஸ்ட்ராவாக உடலில் சில பெல்ட்டுகள் மாட்டப்படுகின்றன. அவை கிரேனில் உள்ள ஸ்பிரிங்குடன் இணைக்கப்படுகிறது.

சைத்ரா ரெட்டி
ஒரு முனையில் சைத்ரா ரெட்டி, மறுபுறம் யமுனா சின்னதுரை. இருவரும் பேய் போல் அந்தரத்தில் பறக்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். யமுனாவை பயமுறுத்த சைத்ரா ரெட்டி அந்தரத்தில் சுற்றுகிறார்கள். ஒரு பேய் சாபமிட்டால் மறு பேய் அந்தரத்தில் பறக்கிறது. இதில் நெட்டிசன்கள் பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. இதை இன்ஸ்டாவே வேடிக்கை பார்க்குது என கமென்ட் போட்டுள்ளார்கள். பெண்கள் வில்லத்தனம் செய்வது, காதலிப்பது, கள்ளக்காதல், நகைச்சுவை, என சீரியல்களில் காட்டப்பட்டாலும் பேய் வேடத்தில் நடிக்கும் பெண்கள் ஒரு அர்ப்பணிப்பு நடவடிக்கையுடன் இத்தகைய ரிஸ்க்குகளை எல்லாம் எடுக்கிறார்கள் என்பதால் பெண்களை போற்றுவோம் என்பதுதான் சைத்ரா சொல்ல வருவது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications