சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சின்ன மருமகள்' சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ஸ்வேதா குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த முறை விவாகரத்து விவகாரம் நேரடியாக சமூக வலைதளங்களில் வெடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகையின் பதிவு
சில மாதங்களுக்கு முன்பே "நான் தான் ஸ்வேதாவின் கணவர்" என்று கூறி பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர் ஆதி. அப்போது அந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த ஸ்வேதா, "எனக்கு அவரை தெரியாது, அவர் கூறுவது பொய்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்தார். அந்த பதிவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படி இருவரும் நேருக்கு நேர் மறுப்பு-குற்றச்சாட்டு வைத்து வந்த நிலையில், தற்போது விஷயம் இன்னும் ஒரு படி மேலே போயுள்ளது. அதாவது, "ஸ்வேதா தான் எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்" என்று ஆதி புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
சின்ன மருமகள் சீரியல் நடிகை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது என்னனா, "என் பெயர் ஆதி. நடிகை ஸ்வேதாவின் கணவர் நான் தான். சில மாதங்களுக்கு முன்பு நான் அளித்த பேட்டியிலும் அதையே சொல்லியிருந்தேன். ஆனால் அதற்கு பிறகு, ஸ்வேதா என்னை தெரியாது, நான் சொல்வது பொய் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைத்தார். ஒருவரை தெரியாது என்று சொல்றவரு, எப்படி எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நடிகை ஸ்வேதா குடும்ப பிரச்சனை
அதோடு அவர் சொல்வதாவது, "அந்த நோட்டீஸ்ல கூட என்னைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் எழுதியிருந்தாங்க. இத்தனை நாள் நான் அமைதியா இருந்தது - அவங்க என் மனைவி என்பதால, ஒரு பெண்ணை பொதுவில் அவமதிக்கக்கூடாது என்ற மரியாதையால தான். ஒருநாள் உண்மை புரிஞ்சு திரும்பி வருவாங்கன்னு நம்பியும் காத்திருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இதுவரை நடந்த விஷயங்களில் தவறு என்னிடமே இருக்கலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். ஆனால் சமீபத்தில் சில உண்மைகள் எனக்கு தெரிய வந்தது. அவர்களின் செயல்களால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் கொடுத்த ஆதாரங்களை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது" என்று கூறியுள்ளார்.
விவாகரத்து சர்ச்சை
இதையும் தாண்டி, "அவரை மதித்ததாலேயே சில முக்கிய ஆதாரங்களை வெளியிடாமல் வைத்திருந்தேன். இன்னும் அதை முழுமையாக வெளியிட விருப்பமில்லை. ஆனால் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் பரவிக் கொண்டே இருக்கிறது. அதனால் என் வாழ்க்கையும், தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் கடுமையான மன அழுத்தத்திலும் இருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். நான் கொடுமை செய்தேன் என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதை விரைவில் நிரூபிக்கிறேன்" என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
நடிகையின் பதில் என்ன
இந்த விவகாரம் இப்படி நாளுக்கு நாள் திருப்பம் எடுத்துக் கொண்டே போகும் நிலையில், ஸ்வேதா இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதையே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்போது இந்த விவாகரத்து நோட்டீஸ் விவகாரம், 'சின்ன மருமகள்' சீரியல் ரசிகர்களிடமும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications