விஜய் டிவி சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீனுக்கு கிடைத்த பெரிய விருது! இது ரெக்கார்டு.. குவியும் வாழ்த்து
சென்னை: சின்னத்திரையில் பல நடிகர்கள் வந்து போனாலும், சிலர் மட்டும் தான் மக்களோட மனசுல நின்று இடம் பிடிக்கிறார்கள். அந்த மாதிரி நடிகர்களில் ஒருவர்தான் 'சின்ன மருமகள்' சீரியல் ஹீரோ நவீன் குமார். சாதாரண நடிப்பு இல்ல, கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் அவரது ஸ்டைல் தான் இன்றைக்கு அவரை ரசிகர்களிடையே இவ்வளவு பிரபலமாக்கி இருக்கிறது.
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடர் ஆரம்பித்த நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு இளம் பெண், குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு பழமைவாத பணக்கார குடும்பத்தில் மருமகளாக செல்வது, அங்கே அவள் சந்திக்கும் சவால்கள், முற்போக்கு எண்ணங்களுக்கும் பழமைவாதத்துக்கும் இடையிலான மோதல்கள் - இதையெல்லாம் மையமாக வைத்து கதை நகர்கிறது. இந்தக் கதையில் கதாநாயகனாக வரும் நவீன் குமார், தன் எதார்த்தமான நடிப்பால் கதைக்கு உயிர் ஊட்டுகிறார்.

நவீன் குமாருடன் கதாநாயகியாக நடிகை ஸ்வேதா நடித்து வருகிறார். இவர்களுடைய ஜோடி திரையில் இயல்பாகவும் நெருக்கமாகவும் தெரிகிறது. அதனால்தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இந்த ஜோடி பிடித்து போய் இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் காடுகளில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் சமூக வலைதளங்களில் ரொம்பவே வைரலானது. "சின்னத்திரையிலும் இப்படியான குவாலிட்டி சீன்கள் வர்றதே பெரிய விஷயம்"ன்னு பலரும் பாராட்டினாங்க. ஒரு சிலர் இதை கலாய்த்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தான் நவீன் குமாருக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த பிரபல ஊடக நிறுவனம் 'தேசம்' தொலைக்காட்சி, சின்னத்திரை துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 'சின்ன மருமகள்' சீரியலில் நவீனின் சிறப்பான நடிப்புக்காக, நவீன் குமாருக்கு "சின்னத்திரையின் மக்கள் நாயகன்" என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னன்னா, தமிழ் சின்னத்திரை தொடரில் நடித்ததற்காக மலேசிய மண்ணில் 'மக்கள் நாயகன்' என்ற விருதைப் பெறும் முதல் நடிகர் என்ற பெருமையை நவீன் குமார் தான் பெற்றுள்ளார். சின்னத்திரை நடிகர்களுக்கு சர்வதேச அளவில் இப்படியான அங்கீகாரம் கிடைப்பது அரிதான விஷயம். அந்த வகையில், இது அவரது நடிப்புப் பயணத்தில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
நவீன் - ஸ்வேதா ஜோடியுடன், வி.ஆர். திலகம், பானுமதி, சங்கவி ராஜேந்திரன், ஸ்வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட மூத்த மற்றும் இளம் கலைஞர்களின் நடிப்பும் இந்தத் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது. எல்லாரும் தங்களுடைய கதாபாத்திரங்களை இயல்பாக வெளிப்படுத்துவதால் தான் 'சின்ன மருமகள்' டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் இருக்கிறது. தரமான மேக்கிங், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை இந்தத் தொடரை குடும்ப ரசிகர்களிடையே இன்னும் பிரபலமாக்கி வருகிறது.
சர்வதேச விருது வென்றதற்கு பிறகு, நவீன் குமாருக்கு சின்னத்திரை பிரபலங்கள், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "எளிமையான நடிப்பு தான் பெரிய உயரத்துக்கு கொண்டு போகும்"ன்னு அவர் மீண்டும் நிரூபிச்சிருக்கார். கடின உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த இந்த அங்கீகாரம், வருங்காலத்தில் அவரை இன்னும் பெரிய உயரங்களுக்கு கொண்டு போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications