• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Chithi 2 Serial: செம்பருத்திக்கு டஃப் குடுக்க சித்தி 2 ரொம்ப ட்ரை பண்றாங்களாம்!

|

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் ரேட்டிங் குறைஞ்சு போச்சாம்... டாப் 5 பொசிஷன் இழுத்துக்க பறிச்சுக்கன்னு இருக்குது என்கிறார்கள். சித்தி முதல் சீசன் கிரேஸிலேயே ரேட்டிங்கில் இடம் பிடித்த சித்தி 2 வுக்கு இப்போது கஷ்டகாலம் ஆரம்பமாகி இருக்குதுன்னும் சொல்றாங்க.

  Chithi 2 tough to Sembaruthi | Radhika Sarathkumar | Venba Kavin | Aadhi Parvathi

  சித்தி 2 சீரியலில் நிறைய மைனஸ் இருக்குது. கதைக்கு என்று வேண்டும் என்றே வில்லியை திணிக்கற மாதிரி இருக்கு. ஆரம்ப வசனமே சூடா பேசியும்... அதே சூட்டில் வசனம் தொடரும்போது கடைசியாத்தான் ராதிகாவுக்கு கோவம் வருது.

  நந்தினி வீட்டுக்குள் வந்த ரெண்டு மூணு நாளில் இல்லாத பிரச்சனை எல்லாம் கிளப்பறதும்... வீட்டை விட்டு வெளியில் துரத்துவேன்னு சொல்றதும் சுத்தமா கதைக்கு ஒட்டவே இல்லை. கதை கதைன்னு சொல்றீங்களே.. அங்க என்ன கதை இருக்கு...சித்தி சாரதா மட்டும்தான் கதையான்னு கேட்கற மாதிரியும் இருக்கு.

  சன் டிவி செம்பருத்தி

  சன் டிவி செம்பருத்தி

  ஜீ தமிழ் டிவியின் செம்பருத்திக்கு போட்டியா சன் டிவியின் எந்த சீரியலும் நிக்கலை. செம்பருத்தி சீரியலால்தான் சன் டிவியின் செம கலெக்ஷன் கேட்டகிரியில் இரவு நேர 9 மணி ஸ்லாட் இடம் பிடிச்சது. அதுவரைக்கும் சன் டிவியின் முக்கிய ஸ்லாட் என்பது 9:30 நேர ஸ்லாட்தான். அந்த 9 மணி நேரத்தை சன் டிவி ராசாத்தி போன்ற பல சீரியல்களுக்கு ஒதுக்கியும், செம்பருத்திக்கு டஃப் கொடுக்க முடியலை.

  சித்தி 2 செம்பருத்தி

  சித்தி 2 செம்பருத்தி

  செம்பருத்தி நேரத்தில் சன் டிவி முன் மக்களை கட்டிப்போட வேண்டும் என்று நினைத்த சன் டிவி, ராதிகாவின் சித்தி 2 சீரியலுக்கு வித்திட்டது. ராதிகாவும் சானலின் விருப்பப்படி, சீரியலுக்கு சித்தி 2 என்று டைட்டில் வைத்து ஷூட்டிங் ஆரம்பித்தார். கண்ணின் மணி கண்ணின் மணி பாடலும் டைட்டில் சங்காக பழையபடி இடம்பெற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

   எதிர்பார்ப்பு பூர்த்தி

  எதிர்பார்ப்பு பூர்த்தி

  எதிர்பார்ப்பு பூர்த்தியானது மாதிரிதான் ஆரம்ப எபிஸோட்ஸ் இருந்தது. பலரையும் டிவி முன் கண்ணின் மணி கண்ணின் மணி பாடல் இழுத்து வந்து டிவி முன் உட்கார வச்சது. 2 கே கிட்ஸ் கண்ணீர் பனிக்க தங்களது பள்ளிக்கால நினைவுகளுக்கு பாடலின் போது சென்று வந்தார்கள். இதை மறுநாள் நண்பர்களுடன் பகிர்ந்தும் கொண்டார்கள்.

  என்னாச்சோ ஏதாச்சோ

  என்னாச்சோ ஏதாச்சோ

  அடுத்தடுத்த எபிஸோட்ஸ் போராக இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். ரொம்ப பொறுமையை சோதிப்பதாகவும், இத்தனை பொறுமைசாலிகளாகவா நந்தினியின் புருஷன், மாமனார், சாரதா சித்தி இருப்பார்கள் என்கிற எரிச்சலில் ஆட்டோமேட்டிக்கா ஜீ தமிழ் டிவி பக்கம் கை போய்விட்டது என்பது உண்மைதான். தூக்கி வளர்த்த பொண்ணு என்னதான் அனாதையாக இருக்கட்டுமே... இப்படியா சொல்லிக் காண்பிப்பது?

  லாஜிக் இல்லை

  லாஜிக் இல்லை

  லட்சுமிக்கு அண்ணி சாராதாதான் எல்லாம் செய்கிறார்கள். போதாக்குறைக்கு செவ்வந்திக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி இருக்கிறார். புது வீடு சித்தியுடன் சேர்ந்து வெண்பாதான் கட்டித் தரப்பு போகிறாள். ஆனால், லட்சுமிக்கு அன்னை குடும்பத்தை கெடுக்கணுமாம்.. என்ன லாஜிக் இல்லாத வெஞ்சன்ஸ்? கதையின் முக்கிய அம்சமே லாஜிக் இல்லாமல் இருந்தால் எப்படி நம்பி உட்கார முடியும்?

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Siddhi 2 serial has a lot of minus. The story is supposed to be like negative character. At the beginning of the verse in the same verse talking ...
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more