சூர்யாவுடன் புது படத்தில் இணையும் சிபி.. ரசிகர்களுக்கு இது வேற லெவல் ட்விஸ்ட்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிபி, சூர்யாவுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
சிபிக்கு கிடைத்த புது வாய்ப்புக்கு ரசிகர்கள் நன்றிகளை கூறிவருகின்றனர்.

கிடைத்த புது வாய்ப்பு
விஜய் டிவியின் மூலமாக ஒலிபரப்பான பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட சிபி இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் துணை கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் மன்றம் அமைக்கும் வகையில் இவர் பாப்புலராகி விட்டார். தன்னுடைய நேர்மை மற்றும் தைரியமான பேச்சால் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட இவருக்கு தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்புக்காக ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பணப்பெட்டியோடு வெளியேறிய சிபி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஒரு சிலர்தான் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஒருசிலர் இதுவரைக்கும் வாங்கி வைத்திருந்த நல்ல பெயர்களை இழந்து போயிருக்கின்றனர். இதில் சிபி முதல் வகையைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன்பு அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து விட்டார். கடைசி நாள் வரைக்கும் இவர் இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் இவர் ஏமாற்றத்தை கொடுத்து விட்டு பணப்பெட்டியோடு கிளம்பி விட்டார். இவர் பணத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் 12 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர் வெளியேறி இருந்தாலும், ரசிகர்களின் மனதில் இவர் மென்மேலும் உயர்ந்து விட்டார். இவருடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கும் ரசிகர்கள் இவர் செய்த எல்லா செயலையும் ஆதரித்து வந்தனர். தற்போது ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் தற்போது பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இவர் தரப்பிலிருந்து இன்னும் அதைப்பற்றி எந்த ஒரு முடிவுகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு இவர் செய்யும் செயல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சூரியாவோடு கைகோர்க்கும் சிபி
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த சிபி தற்போது சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான செய்திகளும் போட்டோக்களும் தற்போது அவருடைய ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. சிபியின் அடுத்த முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கும் போது, இவர் அந்த படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக அதிகரித்துள்ளது. தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சிபி இருக்கும் போட்டோக்களை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications