ரஜினியின் வீட்டு முன்பு குக் வித் கோமாளி ஷ்ருதிகா செய்த செயல் .. ரஜினியின் மீது இவ்வளவு பாசமா??
சென்னை: ஷ்ருதிகா ரஜினியின் மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
ஒரு முறையேனும் ரஜினியை பார்த்து விட மாட்டேனா என்று ஏக்கத்தோடு ஷ்ருதிகா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
எப்போதும் பாசிட்டிவ் ஆக பேசும் ஷ்ருதிகா இவ்வளவு ஆசை மனதிற்குள் வைத்திருக்கிறாரா என்று பலர் வியந்து வருகிறார்கள்.

கை கொடுக்காத வெள்ளி திரை
திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி தான் நடித்த படங்கள் எதுவும் தனக்கு சரியாக வரவில்லை என்றதும் திருமண பந்தத்தில் அடி எடுத்து வைத்து ஒரு குழந்தைக்கு அம்மாவான ஷ்ருதிகா தற்போது மீண்டும் சின்னத்திரையில அடி எடுத்து வைத்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருடைய மனதில் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷ்ருதிகா தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை வெளியிட்டு பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறார்.

குடும்பமே கொண்டாடும் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் என்று சொன்னதும் அவரை சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் ரசிகர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர். அதில் ஒருவராக ஷ்ருதிகாவும் இருந்து வருகிறார். அவர் தினமும் ரஜினிகாந்தின் வீட்டை கடந்து செல்லும்போது எல்லாம் ஒரு முறையேனும் ரஜினியை பார்த்து விட மாட்டோமா என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்து வருகிறாராம். ஷ்ருதி மட்டுமல்லாமல் அவருடைய கணவரும், குழந்தையும் ரஜினியின் மீது அந்த அளவிற்கு பாசத்தையும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்று சுட்டி கூறியிருக்கிறார்.

ஷ்ருதியின் ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஷ்ருதி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையோடு காரில் சென்று கொண்டிருக்கும்போது ரஜினியின் வீட்டு முன்பு நின்றபடியே ஒரு முறையாவது தலைவரை பார்த்து விட மாட்டோமா?? ஒரு நாளாவது வீட்டுக்கு வாங்க டீ குடிக்க என்று அவர் கூப்பிட்டு விடமாட்டாரா?? என்று தன்னுடைய ஆவலை வெளிக்காட்டி இருக்கிறார். பொதுமக்கள் பலரும் இந்த ஆர்வத்தோடு இருக்கும் நிலையில் நானும் அதற்கு விதிவிலக்கல்ல என்று ஷ்ருதி பேசி இருப்பது ரஜினியின் தீவிரமான ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

செம ஃபீலிங் தான்
ஷ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் வீடியோவில் கேப்ஷனில் நாங்கள் தலைவருடைய வெறியர்கள். அவருடைய வீடு இருக்கும் பாதையை கடந்து செல்லும் போதெல்லாம் எங்களை அறியாமல் வீட்டை நோக்கி திரும்பி விடுகிறோம். எங்கள் சூப்பர் ஸ்டார் மீது நிறைய அன்பு உள்ளது. இந்த உலகில் மிகவும் எளிமையான மனிதர் அவர். நான் உங்களை வணங்குகிறேன்..விரும்புகிறேன்.. என்று உணர்ச்சி பெருக்கெடுத்து பதிவிட்டு இருக்கிறார். எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் ஷ்ருதிகாவின் ஆசை விரைவில் நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் பலர் அவருக்கு கமெண்ட்களில் கூறி வருகின்றனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications