பிக் பாஸ் ஆறாவது சீசன் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்.. அதிகமாக சம்பளம் வாங்குவது இவர் தானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசன் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் விவரம் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிகமான சம்பளம் வாங்கும் போட்டியாளர் ஆயிஷா தானாம்.

இருக்கும் 21 போட்டியாளர்களில் குறைவாக சம்பளம் வாங்குவது தனலட்சுமி தானாம்.

போட்டிகள் அதிகம் தான்

போட்டிகள் அதிகம் தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு சீசன்களில் போட்டியாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே வாழ்க்கை வேற லெவல் வளர்ச்சி அடைந்து விடும் என்று ஒவ்வொரு போட்டியாளரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புது முயற்சி ஆக மக்களில் இருந்தும் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

அதிகமான சம்பளம் வாங்குபவர்

அதிகமான சம்பளம் வாங்குபவர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சம்பளத்தோடு தான் அங்கே விளையாடி வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான். அதுவும் ஒவ்வொரு சீசனிலும் பல போட்டியாளர்கள் இந்த சீசன் நிகழ்ச்சியில் இருந்து அதிக அளவில் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் வெளியே சென்று வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போதைய ஆறாவது சீசனில் இருக்கும் 21 போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அதிகமாக சம்பளம் வாங்கும் போட்டியாளராக ஆயிஷா இருந்து வருகிறார் .அவர் ஒரு நாளைக்கு 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறாராம்.

ஒரு நாள் சம்பளம்

ஒரு நாள் சம்பளம்

சின்னத்திரை நடிகை ரச்சிதா 25,000 முதல் 28 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அவரை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டருக்கும் 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறாராம். அடுத்ததாக அசீம் 22,000 முதல் 25 ஆயிரம் வரையிலும், மைனா நந்தினி 20,000 முதல் 25 ஆயிரம் வரையிலும், ஷெரினா 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும், அமுதவாணன் 23 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரையிலும், ஜனனி சாந்தி இருவரும் 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரையிலும், சிவில் கணேஷ் 20000 முதல் 25 ஆயிரம் வரையிலும், அசல் கோளார் பதினைந்தாயிரம் முதல் 17,000 வரையிலும், மணிகண்டன் 18000 முதல் 24 ஆயிரம் வரையிலும் ஏ டி கே ரூபாய் 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரையிலும், மகேஸ்வரி 18000 முதல் 23 ஆயிரம் வரையிலும் பிஜே கதிரவன் 18,000 முதல் 22,000 வரையிலும் வாங்கி வருகின்றார்களாம்.

ஜி பி முத்துவின் சம்பளம்

ஜி பி முத்துவின் சம்பளம்

அவர்களைத் தொடர்ந்து நிவா 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலும் தனலட்சுமி 11 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் வாங்கி வருகிறாராம். ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கேட்கப்படும் ஜிபி முத்து 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை ஒரு நாள் சம்பளமாக பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பிக் பாஸ் போட்டியாளர்கள் இதற்கு முன்பு அவர்கள் வாங்கி வரும் சம்பளங்களின் அடிப்படையில் தான் இவர்களுக்கு இங்கே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பிக் பாஸ் வீட்டிற்க்குள் போட்டியாளர்கள் இருக்கும் நாள் வரைக்கும் அவர்களுக்கு இந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், இதோடு அவர்கள் உள்ளே ஜெயிக்கும் போட்டிகளுக்கு கிடைக்கும் ஆறுதல் பரிசுகளும் கிடைப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+