தமிழில் பதிவு வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. புரியாமல் நெட்டிசன்கள்.. வி ஜே அஞ்சனாவின் சிறப்பான பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவனின் தமிழை சரிவர புரிந்து கொள்ளாத நெட்டிசன்கள் ட்விட்டரில் விக்னேஷ் சிவனை ஏகத்துக்கும் திட்டி தீர்த்துள்ளனர்.

இதை பார்த்த விஜேஅஞ்சனா விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பதிவை மற்றவர்களுக்கு புரியுமாறு விளக்கம் கொடுத்துள்ளார்.

தான் ஒன்று சொல்ல நினைத்து அது தவறான வேறொன்றாக புரிந்து கொள்ளப்பட்டதை எண்ணி நொந்து போய் இருப்பார் விக்னேஷ் சிவன் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

மல்டி டேலன்டர் விக்னேஷ் சிவன்

மல்டி டேலன்டர் விக்னேஷ் சிவன்

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் படத்தின் வெற்றி முலம் மிகவும் பிரபலமானார்.தமிழில் பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் முடித்திருக்கும் விக்னேஷ் சிவன் தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தமைக்காக முதலமைச்சரிடம் இருந்து பாராட்டையும் பெற்றிருந்தார்.

பாராட்டை குவித்து வரும் நீயா நானா

பாராட்டை குவித்து வரும் நீயா நானா

சென்ற வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சிக்கும்,அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத்துக்கும் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஒரு குழந்தை தனது தந்தையின் அன்பை குறித்து பேசியதும், தன் தந்தை எதிலும் தோற்க மாட்டார் என்று கூறியதும், அந்த தந்தை தன் இயலாமை பற்றியும் தன் மகள் மீது தான் வைத்திருக்கும் அன்பை பற்றியும் பேசி இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பார்போர் கண்களை குளமாக்குவது மட்டுமின்றி பாராட்டையும் பெற்று வரும் அந்த வீடியோவை பல்வேறு செலிபிரட்டிகள் தங்களது பக்கங்களில் ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சரியான வார்த்தை

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சரியான வார்த்தை

இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய வாழ்த்து செய்தியில் "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" என்று பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவை ஹை ஸ்பீடில் படித்த நெட்டிசன்கள் சேர்ந்ததன்று என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்டு விக்னேஷ் சிவனை ஏகத்துக்கும் வசைப்பாடி வருகின்றனர். சேர்ந்ததன்று- சேர்ந்ததென்று இரு வார்த்தைகளுக்கு இடையே உள்ள புரிதல் குழப்பம் காரணமாக ஒரு பக்கம் இணைய வாசிகள் விக்னேஷ் சிவனை அர்ச்சித்து வந்தாலும், அவரே ஒரு எழுத்தர் அவருக்கு தெரியாத தமிழா..!!என்று விக்னேஷ் சினக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

களம் இறங்கிய விஜே அஞ்சனா

களம் இறங்கிய விஜே அஞ்சனா

ட்விட்டரில் நடந்து வரும் இந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை பார்த்த விஜே வும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளருமான விஜே அஞ்சனா விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக களம் இறங்கி ட்விட்டரில் தமிழ் வகுப்பு எடுத்துள்ளார். "சேர்ந்ததென்று னு டைப் பண்ணலயே! சேர்ந்ததன்று னு கரெக்டா தான டைப் பண்ணிருக்காரு!

சேர்ந்தது + அன்று ன் அர்த்தம் சேர்ந்தது அல்ல ! சுத்தமான தமிழ்! கரெக்டா தான் டைப் பண்ணியிருக்காரு! இது புரியாம எவ்வளோ கமெண்ட்ஸ்! என்று பதிவு செய்துள்ள விஜே அஞ்சனா சில இணையவாசிகளின் தமிழ் அறிவை எண்ணி தனக்குத்தானே தலையில் அடித்துக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+