எவிக்ட்டானார் பிக்பாஸ் சீசன் 6ன் ஸ்லீப்பிங் பியூட்டி? நடிகை குயின்ஸி வாங்கிய சம்பளம் எவ்வளவு ?
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் குயின்ஸி வெளியேறியதாக கூறப்படும் நிலையில் அவருடைய ஊதியம் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் குயின்ஸி ஸ்டான்லி. இவர் தென்னிந்திய நடிகை. இவர் சிறந்த நடன கலைஞர். இவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் குயின்ஸி கால் பதித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் சின்னத்திரையிலும் கால் பதித்தார்.

அன்பே வா சீரியல்
பின்னர் அன்பே வா சீரியலில் நடித்து வந்தார். இவர் கருப்பு கண்ணாடி என்ற படத்திலும் நடித்துள்ளார். விடியும் வரை காத்திரு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 75 ஆயிரம் பேர் பாலோ செய்கிறார்கள்.

பிக்பாஸில் குயின்ஸி
அதிக ரசிகர்களை கொண்ட குயின்ஸி பிக்பாஸிற்கு வந்ததால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மொத்தம் 106 நாட்களில் பாதி கிணற்றை தாண்டியுள்ள குயின்ஸி, அதாவது 56 நாட்களை கடந்துள்ளார். பிக்பாஸில் ஆரம்பத்தில் ஏதோ தானோ என இருந்தாலும் போக போக டாஸ்க்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

எந்த டாஸ்க்
கடினமான டாஸ்க்காக இருந்தாலும் நின்று விளையாடினார். எந்த குரூப் பாலிடிக்ஸிலும் மாட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இவர் பிக்பாஸ் போட்டியிலிருந்து இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டுவிட்டார். இந்த வாரம் தனலட்சுமி வெளியேறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் குயின்ஸி வெளியேறியுள்ளார்.

ஊதியம் என்ன
சண்டை, சச்சரவுகளுக்கு மத்தியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 8 வாரங்களை கடந்து 9 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் குயின்ஸியின் ஊதியம் எவ்வளவு இருக்கும் என்பதை கூகுளில் ரசிகர்கள் தேடி வருகிறார்கள். அந்த வகையில் குயின்ஸிக்கு வாரம் 2.5 லட்சம் ரூபாய் என பேசப்பட்டு அவருக்கு 8 வாரத்திற்கு ரூ 20 லட்சம் வழங்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

இவ்வளவுதானா ஊதியம்
இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அது போல் குயின்ஸிக்கு வாரத்திற்கு ரூ 15 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரைதான் ஊதியம் இருந்திருக்கும். எனவே 8 வாரங்களுக்கு அவர் ரூ 1.60 லட்சம் வரை பெற்றிருக்க கூடும் என்கிறார்கள். இதெல்லாம் அனுமானங்களே தவிர அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications