எதிர்நீச்சல்: கரிகாலனோடு சேர்ந்து ஜனனி எடுத்த முடிவை கேட்டு வாயில் அடித்து கதறும் அப்பத்தா
எதிர்நீச்சல் சீரியல் ஜனனியாக நடிக்கும் மதுமிதா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த காமெடி வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஜனனி கரிகாலனோடு தொடர்ந்து ரீ்ல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை ரசிகர்கள் பலர் இது உறவு முறையையே மாற்றி விட்டதே என்று ஃபீல் பண்ணி வருகிறார்கள்.

டிஆர்பி யில் முன்னணி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பலருடைய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ,நடிகைகள் அனைவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டனர். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும் ஆரம்பித்துவிட்டது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு அனைவரும் எதார்த்தமாக நடிப்பை காட்டி வருகின்றனர். இதனாலே இந்த சீரியல் நாளுக்கு நாள் முன்னேறிய டிஆர்பி யிலும் அதிகமாக ரிசல்டை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் இருந்ததை விடவும் இந்த வாரத்தில் இந்த சீரியல் அதிகமான டிஆர்பி அளவை பெற்றிருக்கிறது. சன் டிவி, விஜய் டிவி ,ஜீ தமிழ் போன்ற முன்னணி சீரியல்களின் இந்த சீரியல் டாப் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அப்பத்தாவிற்க்கு எதிரான சதி
ஏற்கனவே இந்த சீரியலில் ஒவ்வொரு வாரமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் அப்பத்தா பாட்டியை ஆள் வைத்து கொலை செய்து விட வேண்டும் என்று குணசேகரன் பிளான் செய்து கொண்டிருக்க, அது கடைசி நேரத்தில் ஜனனியால் பிளாப் ஆகிவிட்டது. பொங்கல் கொண்டாட சென்ற இடத்தில் ஊர்க்காரர் ஒருவரால் அப்பத்தாவை கொலை செய்ய முயற்சி செய்யும் போது கடைசி நேரத்தில் ஜனனி அதை தடுத்து தன்னுடைய தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இப்ப வரைக்கும் சக்தி ஜனனிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

கதையையே மாற்றிய நபர்
ஆரம்பத்தில் இருந்தே குணசேகரன் வீட்டுப் பெண்களை சமையல் செய்வதற்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு மட்டும்தான் என்கிற நிலைமையில் வைத்திருந்த நிலையில், ஜனனியின் வருகையால் இந்த வீட்டில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் ஜனனிக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமானோர் ஆதரவு கொடுக்க தொடங்கி விட்டனர். எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்கும் மதுமிதா தற்போது எதிர்நீச்சல் ஜனனியாகவே ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் காமெடியாகவும், முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்திருப்பது கரிகாலனாக இருக்கிறார் இவர் இந்த சீரியலில் வந்தாலே அடுத்து என்ன கலாட்டா செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

காமெடியான ரீல்ஸ்
சீரியலில் மட்டுமல்லாமல் பிஸியாக இருக்கும் நேயர்களிலும் ஜனனி மற்றும் கரிகாலன் இருவரும் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தான் சமீபத்தில் ஜனனி அப்பத்தாவோடு சேர்ந்து ஒரு ரீல்ஸ் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஜனனி நாளை பின்ன இந்த வீட்டில் நான் இல்லன்னா என்ன தேடி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கக் கூடாது. இதோட தான் நான் ஓடிப் போயிருப்பேன் என்று கரிகாலனை காட்ட, அப்பத்தா வாயில் அடித்துக்கொண்டு அய்யய்யோ என்று கதறுவது போன்ற வீடியோ இருக்கிறது. இது பார்த்து நிட்டிசன்கள் பலரும் கலாய்த்து என்ன ஜோடி மாரி போச்சு கரிகாலன் ஆரம்பத்தில் குணசேகரின் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்று வந்து, பிறகு ஆதிரை ஓகே என்று கூறி இப்போ ஏற்கனவே சக்தி கல்யாணம் செய்த ஜனனியின் பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறாரே என்று கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications