ராஜு வார்த்தை விட்டுவிட்டார் புலம்பும் பாவனி...யார் செய்தது சரி குழம்பும் ரசிகர்கள்
சென்னை: இதுவரைக்கும் பிரச்சனைகளில் தலையிடாது இருந்து வந்த ராஜு நேற்றைய பிரச்சனைகளில் பேசிய வார்த்தைகள் பாவனியை கஷ்டத்திற்கு ஆளாகி விட்டதாம்.
ஜாலியாக சென்று கொண்டிருந்த ஐந்தாவது சீசன் தற்போது பிரச்சனைகளால் பொங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் யார் செய்ததும் தவறு என்று ரசிகர்கள் தங்களுடைய பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டார்கள்.

பிரச்சனை தொடங்கிடுச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பிரச்சனைகளுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் தான் ஒவ்வொரு சீசனும் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு மாற்றாக ஐந்தாவது சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நீங்கள் நினைப்பது தவறு என்பதை தற்போது ஐந்தாவது சீசனும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதல்வாரத்தில் கும்மாளமிட்டு ஜாலியாக சுற்றித்திரிந்த போட்டியாளர்கள் தற்போது முறைத்துக்கொண்டு தங்களுடைய மனக் குமுறல்களை கொட்டி வருகின்றனர்.

டாஸ்க்கால் ஏற்பட்ட பூகம்பம்
இதுநாள் வரைக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் தான் இருந்து வந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் இப்படியே இருந்தால் நமக்கு டிஆர்பி அதிகரிக்காது என்று நினைத்துவிட்டார் போல. சண்டை சச்சரவுகள் வந்தால்தானே ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று புரிந்துகொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே டாஸ்க் வைத்து விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தவறு யார் பக்கம்
டாஸ்க் என்றால் என்ன என்று சரியாக புரிந்து கொள்ளாமல் சில போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று ஒருபக்கம் ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கும் போது, கேம் என்றால் அப்படி இப்படி இருக்க தானே செய்யும். அதற்காக இப்படியா சண்டை போட்டு ரசிகர்களை பாடாய் படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கலாய்த்து வருகின்றனர். யார் என்ன சொன்னாலும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் பூகம்பமாக பிரச்சினை வெடித்திருக்கிறது. இதில் தவறு யார் பக்கம் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தான் ரசிகர்களும் திணறி வருகின்றனர்.

ராஜூ மீது குற்றச்சாட்டு
நேற்றைய எபிசோட்டில் தாமரையின் காயினை சுருதி எடுத்துவிட்டார். இது தவறு என்று ஒருபக்கம் போட்டியாளர்கள் கூறிக் கொண்டிருக்கும் போது, ஒரு பக்கம் இதில் ஒன்றும் தவறில்லை என ஒரு சில போட்டியாளர்கள் கூறிவந்தனர். இதில் தாமரைக்கு ஆதரவாக ராஜு பாவனியிடம் பேசிய வார்த்தைகள் தான் தற்போது மனதை ரொம்பவே பாதித்து விட்டது என்று கூறிவருகிறார். இந்த பிரச்சனைக்கு பிக் பாஸ் தீர்ப்பு சொல்வாரா என ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ராஜூ மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி கொண்டிருக்கும் பாவனி சொல்வது சரிதானா என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கமெண்ட் போர் நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications