ராஜு இருந்தாலே அந்த இடம் கலகலப்பு தான்...புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
சென்னை: தான் விளையாட்டில் இருந்து வெளியேறினாலும் அந்த இடத்தை கலகலப்பாக மாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆக்ரோஷமான நேரத்தில் இவருடைய எதிர்பாராத காமெடியை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
எந்த இடத்தில் ராஜு இருக்கிறாரோ அங்கே சிரிப்பு சத்தம் அதிகமாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டும் கலந்த எபிசோடு
பிக் பாஸ் சீசன்களில் இதுவரைக்கும் இல்லாத வகையில் நேற்றைய எபிசோடு ஆக்ரோஷமாகவும், ஜாலியாகவும் இருந்திருக்கிறது. ஒருபக்கமாக ஆரம்பத்தில் கலவரமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசியில் கலகலப்பாக மாறிவிட்டது. என்ன தான் ஒரு சில போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டு சக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களை எரிச்சலடைய வைத்துக் கொண்டிருந்தாலும், ராஜூ செய்த செயல் வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புதுமையான டாஸ்க்
நேற்றைய எபிசோட்டில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்று பொம்மை டாஸ்க் வைத்து எப்படியாவது பிரச்சனையை ஏற்படுத்தி விட வேண்டும் என்று பிக்பாஸ் பக்காவாக ப்ளான் போட்டிருந்தது. போட்டியாளர்கள் அடுத்தவர்களை காப்பாற்றுவதற்காக தான் விளையாட வேண்டும் என்று வித்தியாசமாக டாஸ்க் வைத்திருந்தாலும் அதில் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்றும் முட்டி மோதிக்கொண்டு போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பிரியங்காவின் செயல்
முதல் ரவுண்டில் பிரியங்கா வெளியேறிவிட்டார், இதனால் பிரியங்காவின் ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிரியங்காவின் செயல் வேற லெவல் என்று கூறிவருகின்றனர். தான் வெளியேறினாலும் நோ ப்ராப்ளம் என்று கூலாக அவர் எடுத்துக்கொண்டு இருந்ததை பார்த்ததும் ரசிகர்கள் உச்சுக்கொட்டி ரசித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதற்குப் பிறகு நிரூப் மற்றும் அக்ஷரா, சிபி இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தது.

செம காமெடி தான்
பல பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கடைசி நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விட்டார் ராஜு. இவர் இந்த மாதிரி ஒரு காமெடி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஏற்கனவே இவருக்கு மிமிக்ரி திறமை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், தான் தோற்றாலும் அதனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு அனைவரின் மன நிலையையும் மாற்றி விட்டார். அதனால் இவருடைய ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications