நடிகர் விஷ்ணுவின் வாழ்க்கையில் அடுத்தடுத்த சோகங்கள்.. போகும் இடமெல்லாம் இப்படியா ஆக வேண்டும்..!!
சென்னை: ஒருத்தருக்கு கெட்ட நேரம் வந்தால் இப்படியா வர வேண்டும் என்று ரசிகர்கள் விஷ்ணுவை நினைத்து குழம்பி வருகிறார்கள்.
சின்னத்திரையின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷ்ணு நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்கள் ஒரே நேரத்தில் முடிக்கப்படுவதால் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார்களாம்.
நடிகர் விஷ்ணு தான் நடிக்கும் சீரியல்கள் முடிவடைவதை பற்றி எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கா விட்டாலும் அவருடைய ரசிகர்கள் தான் விஷ்ணு சீக்கிரமாக வேற சீரியலில் வரவேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரை சாக்லேட் பாய்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலின் மூலமாக சீரியலில் அறிமுகமான விஷ்ணு அந்த சீரியலுக்கு பிறகு சில காலங்கள் எந்த சீரியலிலும் நடித்து வராமல் இருந்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு மீண்டும் சீரியலில் சாக்லேட் பாயாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. நடிகர் விமல் மற்றும் அஞ்சலியின் நடித்த மாப்ள சிங்கம் திரைப்படத்திலோ தன்னை துணை கதா நாயகனாக நடித்திருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்தியா சீரியல் இவருடைய நடிப்பு மற்றும் இவருக்கும் ஆயிஷாவிற்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் சூப்பர் என்று பலரும் சர்டிபிகேட் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

கிசுகிசு வதந்தி
சத்யா சீரியலில் நடிக்கும் போது ஆயிஷாவிற்கும் இவருக்கும் காதல் என்று பலரும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அதைப்பற்றி இவர்கள் இருவரும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது கலர்ஸ் தமிழில் புது சீரியலில் நடித்து வந்தார். இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ரட்சிதா மகாலட்சுமி நடித்து வருகிறார். இந்த சீரியல் பிற மொழி தழுவல் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும் இதுவும் அழகாக தான் இருக்கிறது என்று இந்த சீரியலுக்கு பலர் ரசிகர்களாக மாறி இருக்கின்றனர்.

கோபத்தை வெளிக்காட்டிய ரட்சிதா
மிகவும் எதிர்பார்ப்போடு ஒளிபரப்பப்பட்ட இது சொல்ல மறந்த கதை சீரியல் தற்போது ஒளிபரப்பான ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட்டது. காரணம் என்னவென்று இதுவரைக்கும் சீரியல் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் கூறவில்லை. சீரியல் முடிக்கப்பட்டதால் இதில் கதாநாயகியாக நடிக்கும் ரட்சிதா மகாலட்சுமி தன்னுடைய கோபத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக தெரிவித்திருந்தார். அவர் கலர்ஸ் தமிழ் சேனலை வெறுப்போடு விமர்சிருந்தார். ஆனால் இந்த சீரியல் முடிப்பதை பற்றி விஷ்ணு எந்த ஒரு வருத்தத்தையும் வெளி காட்ட வில்லை. ஆனால் அவருடைய தீவிரமான ரசிகைகள் சீரியல் முடிக்கப்படுவதை குறித்து வருத்தத்தை தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

வருத்தத்தில் ரசிகர்கள்
அதே நேரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலும் தற்போது கடைசி கட்டத்தை நெருங்கி விட்டது. இதனால் சீரியல் ரசிகர்கள் அதிகமாக அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சத்யா சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பி வந்தாலும் இது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து தான் இது இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலும் முடிவடைவதை பார்க்கும் போது ஒரே நேரத்தில் விஷ்ணு நடிக்கும் இரண்டு சீரியல்கள் முடிவடைவதால் அவரை விடவும் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில், இப்படியா விஷ்ணுவுக்கு நடக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications