விருந்தினராக கூட வைரமுத்துவை அழைக்காதது ஏன்..!? அலசும் நெட்டிசன்கள்.. இப்படி எல்லாமா யோசிப்பாங்க..!!
சென்னை :பொன்னியின் செல்வன் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்தில் இல்லாததை குறித்து கேள்வி கேட்டதற்கு இயக்குனர் மணிரத்தினம் அளித்துள்ள மழுப்பலான பதில்கள் பலரால் நம்பும்படி இல்லை என்றும் ஒருவேளை பழைய மீடூ பிரச்சினையாக தான் இருக்குமோ..!?என்று இனைய வாசிகள் யோசித்து வருகின்றனர்.
பல சூப்பர் ஹிட் பாடல்களில் பணியாற்றியுள்ள இந்த வெற்றிக் கூட்டணியின் வைரமுத்துவை படம் சம்பந்தமான நிகழ்ச்சிக்கு விருந்தினராக கூட அழைக்காதது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

முதலில் பரவிய வதந்தி
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் பல எதிர்பார்ப்புகள் கிடையே மிக பிரம்மாண்டமாய் வெளிவர இருக்கிறது. சரித்திர கால நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் பொழுது வைரமுத்து போன்ற சீனியர் மற்றும் தமிழ் மொழியில் புலமைப் பெற்ற கவிஞர்களை இயக்குனர் மணிரத்தினம் பயன்படுத்தாதது குறித்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.இதைப் பற்றி அந்த நேரத்தில் எந்த விளக்கமும் கொடுக்காத படக்குழு தற்பொழுது படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் மழுப்பலான பதில்களை வழங்கி உள்ளது உண்மையை மறைப்பதாகவும்,திருப்தியாகவும் இல்லை என பலர் கூறி வருகின்றனர்.

சின்மயி பற்ற வைத்த நெருப்பு
மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்- வைரமுத்து கூட்டணி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பகமான வெற்றி கூட்டணியாக வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் படமாக்க உள்ளார் என்ற பேச்சு அடிபட்ட போதே தானும் அந்த படத்தில் பணி புரிய கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக முதலில் வைரமுத்து ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அந்த நேரத்தில் வைரமுத்து மீது ஏற்கனவே மீடூ புகார் அளித்திருந்த பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் சொல்லும் பெண்கள் எல்லாம் தண்டிக்கப்படுவதாகவும், வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், ஆனால் வைரமுத்து புதுப்புது வாய்ப்புகளை பெற்று நல்லவர்களைப் போல் வலம் வருவதாக மீண்டும் ஒரு நெருப்பை பற்ற வைத்தார்.

படத்தை ஆரம்பித்த இயக்குனர்
பாடகி சின்மயி பற்றவைத்த இந்த நெருப்பால்தான் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து நீக்கப்பட்டார் என்றும், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுகாசினியும் பாடகி சின்மயியும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், அதனால் பாடகி சின்மயி சொல்லித்தான் வைரமுத்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த நேரத்தில் செய்திகள் தீயாய் பரவியது. அதற்கேற்றார் போல் இயக்குனர் மணிரத்தினமும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நடிகரும் எழுத்தாளருமான இளங்கோ குமார வேலை படத்தின் எழுத்தாளர்களாக வைத்து படத்தை எடுக்க துவங்கி விட்டார்.

நட்பை மறந்த இயக்குனர்
கொஞ்ச நாட்கள் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பணியாற்றாதது குறித்து செய்திகள் அடங்கியிருந்தாலும், தற்பொழுது படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் நேரடியாக இதைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு புதிய இயக்குனர்கள், புது திறமையாளர்கள் வருவார்கள் போவார்கள் அதைப்போலத்தான் தாம் புது எழுத்தாளரை பொன்னியின் செல்வன் படத்திற்கு பயன்படுத்த விரும்பியதாகவும், அதனால் தான் வேறு நபர்களை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.இதை கேட்ட இணையவாசிகள் படத்திற்கு வைரமுத்துவை பணியாற்ற அழைக்காதது எல்லாம் ஓகே தான். ஆடியோ ரிலீஸ் இன் போது கூட நீண்ட காலமாக இயக்குனர் மணிரத்தினத்துடன் பணியாற்றிய வைரமுத்துவை மரியாதை நிமித்தமாக கூட ஏன் அழைக்கவில்லை என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications