கலர்ஸ் தமிழ் ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்..அதுவும் இவ்வளவு சீக்கிரமாகவா??மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: கலர்ஸ் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த இதயத்தை திருடாதே சீரியலில் ஜோடி தற்போது மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கின்றனர்.
சிவா மற்றும் சஹானா ஜோடிக்கு தற்போது ரசிகர்களின் மத்தியில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்களை கவரும் சீரியல்
ரசிகர்களின் மனதை கவர்ந்த புதுமையான சீரியல்கள் எப்போதுமே தனித்துவமான இடத்தை பிடித்து விடுகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒரு சில ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மட்டும் தான் ரசிகர்கள் அதிகமாக கவர்ந்திருந்தது. தற்போது புது புது சேனல்கள் பல ரசிகர்களை கவரும் விதமாக சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் இதயத்தை திருடாதே சீரியல் மூலமாக ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்துள்ளது.

முதல் சீசன்
கலர்ஸ் தமிழில் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய சூழல்களில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சீரியலாக இருக்கும் இதயத்தை திருடாதே சீரியலின் வெற்றி காரணமாகத்தான் இதில் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் ஹீரோயினியாக நடிகை ஹேமா பிந்து சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார்- சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக திருமணம் என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை அழிக்கப்படுவதும் அதன் விளைவாக ஏற்படும் சம்பவங்களும் இந்த சீரியலில் முதல் சீசனின் கதையாக ஒளிபரப்பானது.

புதிய சாதனை
தற்போது இரண்டாவது சீசனில் இந்த ஜோடிக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் பிரிந்துபோன சஹானா மற்றும் சிவா ஜோடியை சேர்த்து வைப்பதற்காக மகள் எடுத்த முயற்சிகள் சுவாரசியமாக இருந்து வருகிறது. இரண்டாவது சீசனில் நடக்கும் கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் இந்த கதையை ரசிகர்கள் தொடர்ந்து ரசித்து வருகின்றனர். இவர்களது பெண் குழந்தையாக ஐஸ்வர்யா உள்ளிட்டோரை வைத்து கொண்டு தற்போது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பிப்ரவரி 14,2020 முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இரண்டாம் சீசனும் சேர்ந்து இதயத்தை திருடாதே சீரியல் ஆயிரம் எபிசோடுகள் என்ற மயில்கல்லை இரண்டு ஆண்டுகளுக்குள் கடந்து சாதனை படைத்துள்ளது.

வாழ்த்தும் ரசிகர்கள்
திங்கள் முதல் சனி வரை இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் 2 எபிசோடுகள் ஒரே நாளில் ஒளிபரப்பப்படுகின்றது. இரண்டு ஆண்டுகள் என்று குறுகிய காலத்திற்குள் இந்த சீரியல் ஆயிரம் எபிசோட்கள் என்ற மைல்கல்லை எளிதாக அடைய முடிந்தது. விறுவிறுப்பான மற்றும் சுவாரசியமான கதை களம் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகி ஒரே நாளில் இரண்டு எபிசோடுக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருவதால் இந்த சாதனையை செய்ய முடிந்தது என சீரியல் குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications