கொஞ்சமாவது புரிகிற மாதிரி பேசுங்க...போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் தான் பேசவேண்டும் என்று இருந்தாலும் எந்த போட்டியாளர்களும் அதை கண்டுக்கவே இல்லை என ரசிகர்கள் காண்டாகி இருக்கின்றனர்.
குசுகுசுவென பேசுவது போட்டியாளர்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது .
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருக்கும் இன்னொரு போட்டியாளர் பேசுவது தான் அதிகமாக கேட்கிறது அதனால் இவர் பேசுவது புரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இங்கேயும் மொழி பிரச்சனையா? ?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் போட்டியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது, என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தாங்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக இவ்வளவு மெனக்கெட்டு காத்திருந்தாலும் கடைசியில் இவர்கள் பேசுவது பல விஷயங்கள் புரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஒருபக்கம் இவர்கள் தமிழை தவிர இங்கிலீஷில் சில நேரங்களில் பேசிக்கொண்டிருப்பது கிராமப்புற ரசிகர்களுக்கு புரியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் பேசும் தமிழ் வார்த்தைகள் கூட பல நேரங்களில் புரியவில்லை என்று இன்னொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

அடிக்கடி சவுண்ட் கூட்ட வேண்டியது இருக்கு
அனைவருக்கும் மைக் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பேசுவது அடுத்தவர்களுக்கு கேட்டு விடக்கூடாது என்று குரலை குறைத்துதான் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக சவுண்டை கூட்ட வேண்டியது இருக்கிறது என்றும் ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். ஒருசில போட்டியாளர்கள் ஹை லெவலில் கத்தி பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருசில போட்டியாளர்கள் எதைப் பேசினாலும் அடுத்தவர்களுக்கு புரியாதபடி பக்கத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டும் புரிகின்ற மாதிரியே பேசி வருகின்றனர்.

டெக்னிக்கல் குறைபாடு
இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களில் எல்லாம் போட்டியாளர்களில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தால் அவர் பேசுவது மட்டும் தெளிவாக ரசிகர்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கும். ஆனால், தற்போதைய சீசனில் போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்கோயோ இருந்து பேசும் பிற போட்டியாளர்களின் சத்தம் கூட அதிகமாக கேட்டு வருகிறது. ஒருவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். நேற்றைய எபிசோடில் கூட என்னிடம் பாவனி ரெட்டி, அபிநவ் கூட பேசிக்கொண்டிருக்கும்பது சரியாக கேட்கவிலலை. அவர் பக்கத்தில் இருந்த பிற போட்டியாளர்கள் பேசுவது அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்
பாவனி ரெட்டியின் அருகில் இருந்து பேசிய பிரியங்காவின் குரலும், அபிஷேக் போன்ற பிற போட்டியாளர்களின் பேச்சு சத்தம் தான் அதிகமாக கேட்டு வருகிறது. ஆனால் ஒரு போட்டியாளர் பேசும்போது அவருக்கு சூம் வைக்கும் எடிட்டர் இந்த சின்ன சின்ன டெக்னிக்கல் குறையை சரி செய்யலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரியங்கா, நிரூப் கையில் எழுதியதாக இருந்தாலும் சரி, அக்ஷரா பேப்பரில் எழுதியதக இருந்தாலும் சரி ,அது ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. இதை பார்க்கவா நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறோம் என்று பலர் வருத்தத்தோடு கமெண்ட்களைப் கொட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications