ப்ரமோக்களில் தலை காட்டாத அபிஷேக்...வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: ரீ-என்ட்ரிக்கு பிறகு அபிஷேக் மாறிவிட்டார் என்று அவருடைய ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்த அபிஷேக் இப்போ இல்லையே என்ன ஆச்சு என்று பலரும் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
கத்தி பேசி ப்ரமோக்களில் இடம் பிடித்துக்கொண்டிருந்த அபிஷேக் இப்போ பவ்யமாக மாறிவிட்டது என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கொளுத்தி போட்டு வருகிறார்கள்.

முன்புபோல இல்லையே??
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அபிஷேக் 5வது சீசனில் நுழைந்திருக்கிறார். ஆனால் முன்பு இருந்தது போல இப்போ இவர் இல்லையே என்ன ஆச்சு என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இதுதான் மெச்சூரிட்டியா அல்லது முதலில் பதுங்கி பின்பு பாயலாம் என்று பொறுமையாக காத்திருக்கிறார் என ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

சினிமா பையன் அபிஷேக்
தன்னைத்தானே சினிமா பையன் என்று அழைத்துக்கொள்ளும் அபிஷேக் ராஜா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமானதும் அவருடைய நெகட்டிவர்ஸ் அவருக்கு எதிராக பல கமெண்டுகளை குவித்து வந்தனர். இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் சுவாரசியம் இருக்காது வெளியே சென்றால் தான் நன்றாக இருக்கும் என்று தினமும் இவருடைய துதியை தான் ஒவ்வொரு கமென்ட்ங்களிலும் பாடிக்கொண்டிருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே இவரும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இல்லாத நேரத்தில் தான் வருத்தம்
அபிஷேக் ராஜா வெளியே சென்ற பிறகு நிகழ்ச்சிக்கு சுவாரசியம் இல்லை என்று பலர் புரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இவரை வெறுப்பவர்கள் கூட அபிஷேக் இருக்கும்போது தினமும் கண்டெண்ட் கொடுத்துக்கொண்டே இருப்பார். ப்ரமோக்களில் இடம் பிடித்தாலும் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் இவரால் இருந்தது. என்றெல்லாம் இவர் இல்லாத வருத்தங்களை சமூக வலைத்தளங்களிலும் ஒவ்வொரு ப்ரமோக்களிலும் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களின் கருத்துக்களை புரிந்து கொண்ட பின் மீண்டும் பிக் பாஸ் அபிஷேக்குக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

ப்ரமோக்களில் வருவதில்லையே!!
வைல்ட் கார்டு என்ட்ரி ஆக அபிஷேக் மீண்டும் வந்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டார்கள். அப்போ இனி நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி விடும் என்று கூறிவந்தனர். முதல்நாளில் இவருடைய என்ட்ரியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து இருந்தாலும் அடுத்த நாளிலிருந்து எப்படியும் இவர் ப்ரமோக்களில் பழையபடி வந்து விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அபிஷேக் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்து இரண்டு தினங்கள் ஆன பிறகும் அவர் ப்ரமோக்களில் அதிகமாக வருவதில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். இவருக்கு பதிலாக தற்போது தாமரை தான் ஒவ்வொரு ப்ரமோவிலும் அதிகமாக இடம் பிடிக்கிறார் என்று பலர் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications