தொடர்ந்து 10 முறை... கெத்து காட்டிய பாவனி..வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி பெற்றிருக்கும் வெற்றி சாதனை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video
ஐந்தாவது சீசனில் முதல் முறையாக ஆர்மி அமைக்கப்பட்ட இவருக்கு தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்கள் சமூகவலைத்தளத்தில் குவிந்து வருகிறது.

சின்னத்தம்பியில் நந்தினி
சின்னத்திரை மூலமாக ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட பாவனி டிவி சீரியல்களில் ஒரு சில காலங்கள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். ஆனால் கடைசியாக இவர் எந்த சீரியல்களிலும் நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருந்தார். பாவனி நடித்து செம ஹிட்டான சின்னத்தம்பி சீரியல் மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் பிரபலம்
விஜய் டிவி, சன் டிவி என்று தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென்று சீரியலின் மூலமாக இடத்தை பிடித்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இவருக்கு தான் முதல் முதலில் ரசிகர்கள் ஆர்மி அமைத்து ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அதிகமானோர் புதுமுகமாக இருந்ததால் இவர் மட்டும் தான் சமூக வலைத்தளம் மூலமாக ஏற்கனவே ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமாக முகமாக இருந்ததால் இவரை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தற்போது வரைக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தொடரும் ரசிகர்களின் ஆதரவு
ஆரம்பத்தில் கதை சொல்லும் டாஸ்க் மூலமாக தன்னுடைய ரசிகர்களையும் கண்ணீரில் மூழ்க வைத்து விட்டார். இவருடைய கதையை கேட்டு பல ரசிகர்கள் ஃபீல் பண்ணி வந்தனர். அதற்கு பிறகு இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பல நேரங்களில் இவர் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்று போட்டியாளர்கள் இவரை தொடர்ந்து நாமினேஷன் செய்து வந்தாலும் இவருடைய ரசிகர்களால் இவர் பாதுகாக்கப்பட்டு வருகிறார். இதுவரைக்கும் தொடர்ந்து பத்து முறை நாமினேஷலிருந்து இவரை ரசிகர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ரசிகர்களின் குறையாத அன்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் எந்த ஒரு பெண் போட்டியாளரும் இத்தனை முறை காப்பாற்றப்பட்டது இல்லை. இவர்தான் முதல் முறையாக அந்த பெயரைப் பெற்று இருக்கிறார். அதனால் பாவனியின் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வைரலாகி வருகின்றனர். ஆரி தான் கடந்த சீசனில் அதிகமான முறை காப்பாற்றபட்டு வந்தார். அது போல இந்த முறை பாவனி காப்பாற்றபட்டு இருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications