கங்கை அமரனுக்கு மகளும் இருக்கிறாரா? பல ஆண்டுகள் மறைந்திருந்த குடும்ப ரகசியம் வெளிவந்தது!
சென்னை: தமிழ் சினிமாவில் பல திறமைகளைக் கொண்டு தனக்கென இடம் பிடித்துள்ள கங்கை அமரன் குறித்து சமீபத்தில் வெளியான ஒரு தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அவருக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர் என்றே பொதுவாக அறியப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு மகளும் இருப்பதாக அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், தமிழ் சினிமாவில் தனது பயணத்தை பாடலாசிரியராக தொடங்கினார். ஆரம்ப காலங்களில் பல சவால்களை சந்தித்த அவர், பின்னர் இளையராஜாவின் இசையில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி கவனம் பெற்றார். தொடர்ந்து இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை நிரூபித்து பல வெற்றிகளை பெற்றார்.

கங்கை அமரனின் ஆரம்ப காலம்
இயக்குநராக அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது. கிராமத்து பின்னணியில் உருவான இந்த படம், நகைச்சுவை, இசை மற்றும் கதைக்களம் ஆகியவற்றின் இணைப்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக கவுண்டமணி மற்றும் செந்தில் இணை நகைச்சுவை இந்த படத்தை இன்னும் உயர்த்தியது.
கங்கை அமரன் இயக்கிய படங்கள்
இசையமைப்பாளராகவும் கங்கை அமரன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். வாழ்வே மாயம், சட்டம், மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற படங்களில் அவர் அமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடம் நீண்ட காலம் பேசப்பட்டன.
கங்கை அமரன் குடும்பம்
குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை, கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் இருவரும் சினிமாவில் முன்னணி முகங்களாக உள்ளனர். இதனால், இவருக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர் என்றே பலரும் நம்பி வந்தனர்.
கங்கை அமரன் மகள்
ஆனால், சமீபத்திய பேட்டியில் கங்கை அமரன் இந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். "எனக்கு ப்ரீத்தி என்ற மகளும் இருக்கிறார். அவர் வெளிநாட்டில் படித்தவர். திருமணம் செய்து வைத்து தற்போது அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். எங்கள் மருமகன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்," என்று அவர் கூறியுள்ளார்.
அவரது மகள் ப்ரீத்தி இதுவரை எந்த பொதுவெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததுடன், சினிமா உலகத்திலிருந்து முற்றிலும் விலகி இருந்துள்ளார். அவரது புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகாததால், இந்த தகவல் ரசிகர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் வெளியாகியதுடன், சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "இத்தனை வருடங்கள் எப்படி இது வெளியில் வராமல் இருந்தது?" என்ற கேள்வியும், "வெங்கட் பிரபு, பிரேம்ஜிக்கு தங்கை இருக்கிறார்களா?" என்ற ஆச்சரியமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
பல தசாப்தங்களாக சினிமாவில் செயலில் இருந்து வரும் கங்கை அமரன், தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகுந்த தனியுரிமையுடன் கையாள்ந்து வந்துள்ளார். அந்த வகையில், இப்போது வெளியான இந்த குடும்ப தகவல் அவரது வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications