சீரியல் நடிகை நந்தினி இறப்பதற்கு முன்பு நடந்த சம்பவம்! சக நடிகர் வெளியிட்ட அதிரடி பதிவு! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை நந்தினி பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவருடன் கௌரி சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் நரேஷ்வர் உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை நந்தினி மறைவு நேற்றிலிருந்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவரைப் பற்றி நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வலி நிறைந்த நினைவுகளை தான் நடிகர் நரேஷ்வர் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் வார்த்தைகளாக பகிர்ந்திருக்கிறார். அது ஒரு சாதாரண இரங்கல் பதிவு இல்ல... ஒரு நண்பன், ஒரு சக நடிகர், ஒரு பயணத் துணை மனம் உடைந்து பேசும் குரல் மாதிரி தான் அந்த வார்த்தைகள் இருக்கிறது.

நரேஷ் வெளியிட்ட பதிவில், "ரெண்டு வருஷமா திரையில் அசோக் - துர்கா மாதிரி இருந்தோம். ஆனா திரைக்கு வெளியில நீ கனவு காண்றவளா, சக்தி நிறைந்தவளா, அன்பான தோழியா இருந்த"ன்னு அவர் சொல்லும்போதே, நந்தினியோட வாழ்க்கை திரைக்கு வெளியில எவ்வளவு உயிர்ப்போட இருந்துச்சுனு புரியுது.
சமீபத்தில் 18-ம் தேதி கூட அடுத்த படப்பிடிப்புக்காக புடவை வாங்கி, சிரிச்சு, எதிர்காலத்தைப் பற்றி பேசிட்டு இருந்தோம்ன்னு அவர் சொல்லி இருக்கிறார். இந்த வார்த்தைகள் நந்தினியின் இழப்பு எவ்வளவு எதிர்பாராதது, எவ்வளவு கொடூரமானது என்பதையே சொல்லிடுது.
நந்தினி... சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த முகம். குறிப்பாக 'கௌரி' சீரியல் மூலம் வீடு வீடாக அறிமுகமானவர். அந்த சீரியலில் துர்கா கேரக்டரில், அமைதியான நடிப்பு, கண்களில் பேசும் உணர்ச்சி - இதுதான் நந்தினியை தனிச்சிறப்பான நடிகையாக்கியது. பெரிய அலப்பறை இல்லாமல், தன்னுடைய நடிப்பாலேயே இடம் பிடித்தவர். இன்னும் உயரத்துக்கு போகணும், இன்னும் பெரிய நடிகையா மாறணும்னு நிறைய கனவுகள் வைத்திருந்தார்னு அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
அப்படி கனவுகளோடு பயணித்த ஒருத்தர், திடீர்னு இந்த முடிவை எடுத்தது தான் எல்லாரையும் உலுக்கியிருக்கு. நந்தினியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், மன அழுத்தம், தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் கடுமையான போராட்டத்தில் இருந்திருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும் உண்மை என்னன்னு முழுமையாக யாருக்கும் தெரியலை. தெரிந்த ஒன்று மட்டும் தான் - அவர் உள்ளுக்குள் மிகப் பெரிய பாரத்தை சுமந்திருக்கிறார்.
அதைத் தான் நரேஷ்வரும் தன்னுடைய பதிவில் சொல்லியிருக்கிறார். "நீ சுமந்த பாரம் தாங்க முடியாததா இருந்திருக்கும்"ன்னு அவர் எழுதும்போது, குற்ற உணர்ச்சியும், உதவ முடியலையேன்னு ஒரு வலியும் கலந்திருக்கிறது. நந்தினியுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.

இந்த பதிவில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது நந்தினிக்கான இரங்கல் மட்டும் இல்லை. "தற்கொலை ஒருபோதும் தீர்வு இல்லை. எவ்வளவு பிரச்சனை என்றாலும் சொல்லுங்க. உங்களை நேசிக்கிறவர்கள் உதவி செய்ய காத்திருக்கிறார்கள்"ன்னு அவர் சொல்லியிருப்பது, இந்த இழப்பிலிருந்து பிறராவது தப்பிக்கணும் என்ற ஒரு மனிதநேயக் குரலாக இருக்கிறது.
நந்தினி இப்போது இல்லை. ஆனா அவர் நடித்த கதாபாத்திரங்கள், அவரோட சிரிப்பு, அவரோட கனவுகள் - இதெல்லாம் தான் அவரை நினைவாக வைத்திருக்கும். துர்கா என்ற கதாபாத்திரம் மாதிரி வலிமையானவளாகவே அவர் மனங்களில் இருப்பார். இந்த இழப்பு சின்னத்திரை உலகுக்கு மட்டுமில்லை, அவரை நேசித்த எல்லாருக்குமே ஒரு பெரிய காயம்.
இந்த செய்தியை படிக்கிற யாராவது மனஅழுத்தத்தில் இருந்தால், தயவுசெய்து தனியாக இருக்க வேண்டாம். குடும்பத்தோடு, நண்பர்களோடு பேசுங்கள். தேவையென்றால் மனநல ஆலோசகர்களை அணுகுங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினமா இருந்தாலும், அதற்கு தீர்வு பேசுவதில்தான் இருக்கிறது. நந்தினியின் நினைவு, குறைந்தது இன்னொருவரையாவது அந்த இருளிலிருந்து வெளியே கொண்டு வரட்டும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications