உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.. டாஸ்க் வைத்து வேட்டு வைக்கும் பிக் பாஸ்
சென்னை: இந்த மாதிரி ஐடியா எல்லாம் பிக் பாஸுக்கு எங்கதான் இருந்து வருகிறதோ என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
கோர்த்து விடுகிறது என்றால் இதுதானா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
எப்படியாவது அடிச்சுக்க வைக்க வேண்டும் என்பது பிக் பாஸின் ஆசை என்று ரசிகர்களுக்கு தெளிவாக தெரிகிறது என்று கமெண்டகள் குவிந்து வருகிறது.

பிக் பாஸின் புது ஐடியா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் புதுவிதமான டாஸ்க்குகள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் குழம்ப வைத்து விடுகிறது. இந்த சீசனில் பொம்மை டாஸ்க்கு வைத்து ஏற்கனவே பிரச்சனைகளை பஞ்சமில்லாமல் தொடங்கிய நிலையில் இப்போது கண்ணாடி டாஸ்க் வைத்து போட்டியாளர்களை பாடாய் படுத்தி இருக்கிறார்கள். சும்மாவே இருந்தால் எப்படி போட்டியாளர்கள் அடித்து கொண்டால் தானே ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் என்று பிக்பாஸ் முடிவு கட்டி விட்டார் போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் புது டாஸ்க்
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என்னும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து ஏ.பி என்று விளையாட வேண்டுமென்று பிக் பாஸ் புது டாஸ்க் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த வீட்டிற்குள் யாருக்கெல்லாம் பிரச்சனைகள் அதிகமாக முட்டிக்கொண்டு இருக்கிறதோ அவர்களை கோர்த்து விட்டு புதுவித பிரச்சனையை உருவாக்க முடிவு செய்து இருக்கிறது. அதுவும் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் வெளிப்படையாக தெரிந்து இருக்கும். அண்ணாச்சி-இசைவாணி, ராஜு-பாவனி, சிபி-அக்ஷரா இவர்களின் காம்பினேஷன் வேற லெவலில் இன்று இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அக்ஷராவுக்கு ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சும்மாவே அக்ஷராவிற்கு அழுகிறதுக்கு சொல்லவே வேண்டாம். இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் சிபியின் செய்கையை பார்த்து அக்ஷரா அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் ரசிகர்கள் இந்தா....தொடங்கிவிட்டார்களா??இன்றைய பர்பாமன்ஸை என்று கலாய்த்து வருகின்றனர். டாக்ஸ்கில் சிபியின் செய்கையை நினைத்து அழுது கொண்டு இருக்கிறாரா??அல்லது பிக் பாஸ் இப்படி கோர்த்து விட்டு விட்டது என்று என்று அழுது கொண்டே இருக்கிறாரா??என தெரியாமல் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் கருத்து
இதுவரைக்கும் எத்தனையோ முறை போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இந்த இடத்தில் எப்படியும் பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்கும் என்று ரசிகர்கள் இப்போது ஆர்வமாக காத்திருக்க தொடங்கிவிட்டார்கள். அதுவும் ராஜு செய்யும் சேட்டைகள் வேற லெவலில் இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். ப்ரமோவில் எப்படி விறுவிறுப்பாக இருக்கிறதோ அதே போல இன்றைய எபிசோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications