தங்க முலாம் கேக் அட்டகாசம்.. கால சூழலில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட மூணு எழுத்து நடிகை: பிரபலம் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சில நடிகைகள் தானாக வலிய சென்று தொழிலதிபர்களிடம் பழகுகிறார்கள். ஆனால், சில நடிகைகள் மனம்திருந்தி வாழ நினைத்தபோதும், விபச்சார வழக்குகளில் கைதாகி விட நேரிடுகிறது" என்று மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.

TN VOICE NOW என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் தந்துள்ள பேட்டியில், "ஊர்வசி ராவ்டேலா என்ற உலக அழகிப்பட்டம் பெற்ற நடிகை, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் லெஜண்ட் படத்தில் நடித்தவர்.. இந்த நடிகைக்கு சிங் என்ற பெயர்கொண்ட பின்னணி பாடகர், 3 கோடி ரூபாய்க்கு தங்க நகை முலாம் பூசப்பட்ட கேக் வாங்கி தந்திருக்கிறார்..

television

அதேபோல, இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜாக்குலின் பெர்னான்டஸ் என்ற இந்தி நடிகை, சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் தொடர்பில் இருந்தார். இந்த சுகேஷ் 200 கோடி வழக்கில் சிக்கி திகாரிலும் உள்ளார்

பாஸ்போர்ட்: தன்னுடன் நட்பு கொண்ட ஜாக்குலினுக்கு, அள்ளி அள்ளி பணம், நகைகளை தந்திருக்கிறார் சுகேஷ்.. 9 லட்சத்துக்கு பாரசீகத்தின் பூனை ஒன்றை வாங்கி தந்துள்ளார்.. இறுதியில் சுகேஷ் வழக்கில் சிக்கும்போது, அமலாக்கத்துறை, உயர்மட்ட துறைகளின் விசாரணையின்போது, ஜாக்குலினின் பாஸ்போர்ட் உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டன.

பிறகு திடீரென அவையெல்லாம் ரிலீஸ் செய்யப்பட்டன.. ஜாக்குலின் இயல்பாக வெளிநாடுகளுக்கெல்லாம் செல்ல துவங்கிவிட்டார். ஆனால், இதுவரை சுகேஷிடம் பணம், நகைகளை பெற்றுக் கொண்டவர், இப்போது சுகேஷ் தன்னை மிரட்டுகிறார் என்று திடீரென பரபரப்பு குற்றச்சாட்டு வீசுகிறார்.

தொழிலதிபர்கள்: இப்படி தொழிலதிபர்களிடம் நடிகைகள் தானாக வலிய சென்று பழகுவது இயல்பான விஷயம்.. அதேசமயம், சிலர் மனம்திருந்தி வாழ வேண்டும் என்று நினைத்தபோதும், விபச்சார வழக்குகளில் சிலர் கைதாகிவிடுகிறார்கள். மாதுரி என்ற நடிகை, 85, 90-களில் நடித்தவர்.. ஆந்திராவை சேர்ந்த மாதுரி, முதலில் மலையாள படங்களில் நடித்து, அதற்கு பிறகு தமிழில் நிறைய படங்களில் நடித்தார்.

மாதுரியின் கணவர், சிட்ஃபண்ட், டிராவல்ஸ் என துவங்கி நஷ்டமாகிவிட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை கோடி நஷ்டம் வந்தது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கும்போது, தான் சினிமாவில் சேர்த்துவைத்த சொத்துக்களை விற்று அந்த கடனையெல்லாம் அடைத்தார் மாதுரி.

பாடகர் மனைவி: போதாக்குறைக்கு ஒரு பாடகரின் மனைவியுடன், மாதுரி கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதெல்லாம் தெரிந்து மாதுரி மனம் நொந்துபோய்விட்டார் மாதுரி.. கணவர் வாங்கிய கடன்காரர்களின் நெருக்கடி அதிகமாகவும், கிட்டத்தட்ட நடுதெருவுக்கு வந்தது போலாகிவிட்டது மாதுரியின் நிலைமை.

இறுதியில் கால சூழலில் விபச்சாரத்தில் தள்ளப்பட்டார் மாதுரி.. ஆனால், மாதுரியின் நல்ல குணத்தை பார்த்து, தயாரிப்பாளர் மகன், ஒருவர் மாதுரியை திருமணம் செய்ய விரும்பினார்.

வேதனை: இதனால், விபச்சார தொழிலை கைவிட முடிவு செய்து, அந்த நபருடன் புதுவாழ்க்கையை மாதுரி துவங்க நினைத்தார். ஆனால், ஏதோ ஒரு ரூபத்தில், மாதுரியை போலீஸார் கைது செய்துவிட்டனர். தன் மீதான விபச்சார வழக்கை உடைக்க நிறையவே போராடினார் மாதுரி. மனம்திருந்தி வாழ நினைத்த நேரத்தில், கைதாகி அவமானப்பட்டார் மாதுரி" என்று வேதனையுடன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+