மீண்டும் விஜய் டிவிக்கு வரும் ஜிபி முத்து.. இந்த முறை எதிர்பார்க்காத அவதாரம்? ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளராக ஜி பி முத்து அறிமுகம் ஆகின்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக தற்போது புதிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து ஒரு போட்டியாளராக அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் அதிகமாக ஆர்வத்தோடு எதிர்பார்த்தனார். ஆனால் ஜி பி முத்து தன்னால் போன் இல்லாமலும் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி அதில் கலந்து கொள்ளவில்லை .ஆனால் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டு வாரங்கள் கூட தன்னால் உள்ளே இருக்க முடியவில்லை என்று வெளியேறிவிட்டார். இவருக்காகவே பலர் இந்த ஆறாவது சீசனை பார்க்க தொடங்கி இருந்தனர். அதனால் டிஆர்பி அதிகரிக்கும் என்று நினைத்த நிலையில் வைத்து திடீரென வெளியேறிவிட்டார்.

குக் வித் கோமாளி
இந்த நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டாக ஜிபி முத்து வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்து விட்டது. தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல நடிகர்கள் வெள்ளி திறையை நோக்கி நகர்ந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியில் மூலமாக அதிகமான ரசிகர்களும் கிடைத்திருக்கின்றனர்.

நான்காவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்து விட்டனர். அதனாலேயே தொடர்ந்து மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி வந்தது. இதில் கோமாளிகளும் குக்குகளும் கலந்து கொள்வார். அந்த வகையில் இந்த முறை நான்காவது சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர். ஏற்கனவே ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெறும். இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடையே இருக்கும் நிலையில் அடுத்ததாக குக்லவித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

ஸ்பெஷல் ஐட்டம்
ஜி பி முத்து தற்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற ப்ரோமோ வெளியானதும் அவருடைய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தங்களுக்கு பிடித்த காமெடி நடிகர்கள் பலர் இருக்கும் நிலையில் ஜிபி முத்துவின் அலப்பறை இனி என்ன மாதிரி இருக்கும் என்று பலர் இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டனர். இவர் குக்காக வர போகிறாரா? அல்லது கோமாளியாக வரப்போகிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications