எதிர்நீச்சல் சீரியலில் புது அறிமுகம்.."ரகிட ரகிட”ஆட்டம் போட்டவர் ஆச்சே..இனி இவர்தான் ஜனனிக்கு வில்லி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது புது கேரக்டர் அறிமுகமாகி இருக்கிறார்.
ஜனனி வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் வீட்டிற்குள் வரும் புது கேரக்டரால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமல்லாமல் விறுவிறுப்பு அதிகரிக்க போகிறதாம்.
புது கேரக்டராக ஹேமா டயால் தான் இனி ஜனனிக்கு வில்லியாக இருக்கப் போகிறாராம்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக கதை களத்தோடு சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தபடி தற்போது ஜனனி சக்தியோடு சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஜனனி எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் சக்தி வீட்டினர் இருந்து வந்தாலும், அதை பெரியதாக கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் ஜனனியின் அம்மா மட்டும் தான் ஜனனியை தேடி அழுது கொண்டிருக்கிறார். அதுபோல ஜனனியின் வீட்டில் இருக்கும் மற்ற மூன்று மருமகளும் ஜனனி எங்கே இருக்கிறாரோ என்று பரிதாபத்தோடு தேடிக் கொண்டிருக்கின்றனர்.

புது கேரக்டர் அறிமுகம்
எதிர்நீச்சல் சீரியல் பெண் அடிமைத்தனத்தை தோலுரித்துக் காட்டுவதாக இருந்து வருகிறது. அதனால் அந்த கொடுமையில் இருந்து ஜனனி வெளியேறி தன்னுடைய சொந்தமான முயற்சியால் இனி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாகவே இருந்து வந்தது. அது தற்போது சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது .இந்த நிலையில் சீரியலில் புதுமுக கேரக்டர் ஒன்று அறிமுகம் ஆகி இருக்கிறது. இது என்ன மாதிரி சீரியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது ரசிகர்களுடைய ஆர்வமாக இருந்து வருகிறது.

போட்டியில் வென்ற குணசேகரன்
ஜனனிக்கு திருமணம் முடிந்து சென்றிருக்கும் குணசேகரன் வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவருமே படிக்காதவர்களாக இருந்தாலும், அவர்கள் திருமணம் செய்து கொண்டது எல்லாமே படித்த பெண்களை தான். ஆனால் படித்து இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு வேலை செய்யக்கூடாது, வீட்டு வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக குணசேகரன் வீட்டில் இருந்து வருகிறது .இதற்கு நேர் மாறாக இருக்கும் ஜனனியால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை என்று வெளியேறி இருக்கிறார். குணசேகரன் ஏற்கனவே ஜனனியிடம் உன்னை வீட்டை விட்டு வெளியேற்றுகிறேன் என்று சபதம் போட்டிருந்தார் தற்போது அந்த சபதத்தில் ஜெயித்து விட்டார்.

குணசேகரனின் மாஸ்டர் பிளான்
இந்த நிலையில் ஜனனி வீட்டை விட்டு சென்றதும் தன்னுடைய தம்பியான சத்தியை தான் தத்தெடுத்துக்கொள்ள போவதாக செண்டிமெண்ட் நாடகம் போட்டிருந்தார். அதற்கு சக்தி தான் தம்பியாகவே இருக்கிறேன். நீ என்ன சொன்னாலும் கேட்பேன் என்று பாச மழைகளை பொழிந்தார். அதனால் உனக்கு இனி ஜனனி வேண்டாம். நான் உனக்கு வேற பொண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் புதிய கேரக்டராக டான்ஸர் ஹேமா டையால் அறிமுகம் ஆகிறார். இன்றைய ப்ரமோவில் அவருடைய புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. இனி சக்திக்கு ஜோடியாக இவர்தான் இருக்க போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

அப்போ டான்ஸ் இப்போ நடிப்பு
புதிய கேரக்டரில் எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகமாகி இருக்கும் டான்சர் ஹேமா டயால் குரூப் டான்சராக பலருக்கும் பரீட்சையமானவர்தான். குறிப்பாக பல குரூப் டான்ஸ்களில் இவர் ஹீரோ பக்கத்திலோ அல்லது ஹீரோயினி பக்கத்திலோ நின்று ஆடிக் கொண்டிருப்பார். அதுவும் இவர் பிரபலமானது தனுஷ் பாடலான ரகிட ரகிட பாடலில் தான் இவரோட க்யூட்டான எக்ஸ்பிரஷனை நெட்டிசன்கள் பார்த்து இவருக்கு வேற லெவலில் மீம்ஸ் களை வெளியிட்டு வைரலாகி விட்டனர். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இவர் அறிமுகமாக இருப்பதால் இந்த சீரியலில் இவர் எப்படி கலக்க போவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடியிருக்கிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications