Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே முடிஞ்சிடுச்சா.. வின்னர் அப் அவங்களா? சூப்பரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 3 யின் கிராண்ட் ஃபினாலே சுற்று கடந்த வாரமே நடத்தி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளான புகழ், பாலா, குரேஷி, மணிமேகலை, ஷரத் உள்ளிட்டோர் செய்யும் கலாட்டாக்களை காண்பதற்காகவே பெரும்பாலானோர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணிக்கெல்லாம் விஜய் டிவி சேனல் முன்பு ஆஜராகிவிடுவர்.

53 வாரங்கள்

53 வாரங்கள்

இத்தனை மாதங்களாக 53 வாரங்களாக நடந்து வந்த இந்த சீசன் தற்போது முடியும் தருவாயை எட்டிவிட்டது. முதல் ஃபைனலிஸ்ட்டாக ஸ்ருத்திகா அர்ஜுன் தேர்வானார். இதையடுத்து அம்மு அபிராமி, வித்யுலேகா, தர்ஷன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து இறுதி சுற்றுக்கு தேர்வாகினர்.

வைல்ட் கார்டு என்ட்ரி

வைல்ட் கார்டு என்ட்ரி

இந்த நிலையில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி நடந்தது. இதில் கிரேஸ் கருணாஸ், வேட்டை முத்துக்குமார், சந்தோஷ் பிரதாப், ரோஷினி ஹரிபிரியன் , சுட்டி அரவிந்த், ராகுல் தாத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்தோணி தாசனும் மனோபாலாவும் வைல்ட் கார்டில் கலந்து கொள்ளவில்லை.

6 போட்டியாளர்கள்

6 போட்டியாளர்கள்

இந்த ரவுண்டில் கிரேஸ் கருணாஸும், சந்தோஷும் இறுதி போட்டிக்கு தேர்வாகினர். ஆக 6 போட்டியாளர்களில் டைட்டிலை தட்டிச் செல்வதற்கான கிராண்ட் ஃபினாலே எப்போது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கிராண்ட் ஃபினாலே போட்டி கடந்த வாரமே நடந்து முடிந்துவிட்டதாக தெரிகிறது.

ஷிவாங்கி

ஷிவாங்கி

கடந்த வெள்ளிக்கிழமை அன்றே நடந்து முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் ஷிவாங்கியோ தனது இன்ஸ்டாவில் குக் வித் கோமாளி சீசன் 3 முடிந்துவிட்டது. அடுத்த சீசனில் நான் ரசிகர்களை சந்திக்கிறேன் என பதிவிட்டிருந்தார். எனவே இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் வித்யுலேகாதான் டைட்டில் வின்னர் என்கிறார்கள்.

Recommended Video

    CWC Kani | Sathyaraj Sir பொண்ணா நடிக்கிறது ரொம்ப Happy | ValliMayil | *Interview
    யார் வின்னர்

    யார் வின்னர்

    இன்னும் சிலர் ஸ்ருத்திகாதான் டைட்டிலை வென்றார் என்றும் இரண்டாவது இடத்தை தர்ஷனும் 3ஆவது இடத்தை அம்மு அபிராமியும் பிடித்ததாக சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்பதை இறுதி போட்டி ஒளிபரப்பானால்தான் தெரியும். அனேகமாக அடுத்த வாரம் ஒளிபரப்பப்படும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+