அடடா முடிஞ்சு போச்சா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வெட்கப் புன்னகையில் ஷபானா
சென்னை : இவர்களுக்கு என்னாச்சு என்று ரசிகர்களே குழம்பிப் போகிற வகையில் செம்பருத்தி ஷபானாவும் பாக்கியலட்சுமி ஆரியனும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகின்றனர்.
ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் இரண்டு கைகளில் எங்கேஜ்மென்ட் மோதிரத்தை போட்டிருக்கும் போட்டோவை போஸ்ட் போட்டதும் அந்த கை யாருக்கு சொந்தமானது என்று கண்டுபிடித்த ரசிகர்கள் இனப அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
ரகசிய நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டார்களா, கல்யாணம் எப்போ என்று நச்சரிக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூடவே கூறி வருகின்றனர்.

உறுதிப்படுத்திட்டாங்களா
அடடா சபானாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா அதுவும் பாக்கியலட்சுமி சீரியல் செழியன் உடன் தானா என்று இப்போ இன்ஸ்டாகிராமே பதறி வருகிறது. சமூக வலைத்தளத்தில் இவர்கள் இருவருமே ஆக்டிவாக இருந்தாலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற மாதிரி செய்கிறார்கள். சொல்ற பதிலை தெளிவாக சொன்னால் புரியாதவர்களுக்கு புரியும் அல்லவா எதுக்காக இப்படி பண்ணுகிறார்கள் என்று சிலர் கடுகடுத்தாலும், கத்திரிக்காய் வெளஞ்சா சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என்று சிலர் பொறுமையும் காக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் செம போஸ்ட்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் அந்த சீரியலில் கதாநாயகி சபானாவுக்கு சொல்லவே வேண்டாம். தன்னுடைய செல்லமான சிரிப்பினால் பலரையும் தன்வயப்படுத்தி இருக்கும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியதுதான். இவர் எப்போதும் ஜாலியாக தன்னுடைய பிரெண்ட்ஸ்களுடன் சுற்றிக்கொண்டு இருந்தாலும் இப்போ காதல் வயப்பட்டு இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட் போட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தெளிவாக சொல்லாமலேயே இப்படி அலைக்களிக்கலாமா என சிலர் செல்லமாக கோபப்பட்டும் இருக்கின்றனர்.

அப்பா அப்படி காதல் இப்போ இப்படியா
முன்பு எல்லாம் கடிதத்தில் காதல் பறந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போ இன்ஸ்டாகிராமில் காதல் பறந்து கொண்டிருக்கிறது. புறாக்களுக்கு பதிலாக சமூக வலைத்தளத்தை காதலுக்குத் தூதாக பயன்படுத்துவது இப்போ ட்ரண்ட் ஆகிவிட்டது போல. அதனால்தான் செம்பருத்தி சபானாவும், பாக்கியலட்சுமி சீரியலின் செழியன் கேரக்டரில் நடிக்கும் ஆரியனும் யாருக்கும் புரியாதபடியே காதல் கவிதைகளை பரிமாறி வருகின்றனர். ஆனாலும் கில்லாடியான ரசிகர்கள் இதை கண்டுபிடித்து விட்டனர். எப்போது திருமணம் என்று ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.

கைகளில் மோதிரம்
ஆரியன் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். இதுதான் இப்போ சமூக வலைதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண் மற்றும் பெண் கைகளில் ஒரே போல மோதிரம் போட்டிருக்கின்றனர். இந்த போட்டோவை பதிவிட்டு அதற்கு ஒரு கேப்ஷனும் கொடுத்திருந்தார். அதில் அவள் ஆன்மாவுடன் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒருநாள் கெமிஸ்ட்ரி குறையும். மேலும் ஒருநாள் வெளிப்புற அழகு மங்கிவிடும். ஆனால் ஆனால் ஆன்மா வயதுக்கு மாறானது ,நித்தியமானது ,அதுதான் காதல் வாழும் இடம் என்று கூறியிருக்கிறார். சபானாவின் தோழியான ரேஷ்மா ஹார்ட்டின்களை பறக்க விட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த போஸ்ட்க்கு சபானாவும் நீங்கள் என்னை வியக்க வைப்பதில் தவறில்லை என்று கூறியிருக்கிறார்.

வேற லெவல் கவிதைதான்
ஆனால் இன்று சபானா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பூ தோரணத்தின் அருகில் நின்றபடி யாரோ என்னிடம் சொன்னார்கள். அங்கே ஒரு பெண் தன் கண்களில் அன்பும் தலைமுடியில் பூக்களும் ஆக இருக்கிறாள் என்று கேப்ஷன் போட்டிருக்கிறார். இப்படியே இவர்கள் இருவரும் போஸ்ட் போட்டு கொண்டு இருப்பதை பார்த்து இவர்களுடைய ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேட்டு வருகின்றனர். அதற்கு ஆரியன் விரைவில் சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார். அப்போ நம்ம சபானாவுக்கு சீக்கிரத்தில் டும் டும் தான் என சந்தோசத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கின்றனர் .
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications