வெங்கட் பிரபுவை சந்தித்த ஐக்கி பெர்ரி... திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக??
சென்னை: ஐக்கி பெர்ரி திடீர் என்று இயக்குனர் வெங்கட் பிரபுவை சந்தித்து உள்ளதால் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கி,வெங்கட்பிரபு படத்தில் கமிட்டாகி விட்டாரா??என்று பலர் எதிர்பார்ப்புகளோடு கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

பல திறமைகள் கைவசம் இருக்கு
ஐக்கி பெர்ரி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன திடீரென்ற இந்த ஒரு மீட்டிங் என்று பலர் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே பிக்பஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு பாடகராக, மருத்துவராகவும், டான்ஸ்ஸராகவும் பல திறமைகளை தனக்குள் வைத்துள்ளார். தற்போதும் இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் அடுத்த கதாநாயகி அவதாரமா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

வாய்ப்பு கிடைத்ததா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்ட பிறகு பலருக்கும் சினிமா துறையில் வாய்ப்புகள் பல வந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு அப்படி எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று வருத்தத்தோடு கூறி வருகின்றனர். அந்த வகையில் ஐக்கி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறதா??என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது.

தஞ்சாவூரு பொன்னு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போது ஐக்கி பெர்ரி என்று அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். இவர் தஞ்சாவூர் பெண்ணாக இருந்தாலும் வெளிநாட்டு பெண் போல சாயலில் தன்னுடைய உடலையும், உடையும் கலக்கலாக மாற்றியிருக்கிறார். இவருடைய கலரிங் செய்யப்பட்ட முடி மற்றும் மேக்கப் அனைத்தையும் பார்த்து பலர் வெளிநாட்டு பெண் என்று நினைத்தார்கள். ஆனால் இவருடைய சுத்தமான தமிழை பார்த்துதான் பலரும் நம்ப தொடங்கியிருக்கின்றனர்.

திடீர் சந்திப்பு
ஒரு பல் மருத்துவராக இருக்கும் இவர் தனக்கு நடிப்பில் இருக்கும் ஆசையின் காரணமாக தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு கிடைத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அவருடைய முன்னேற்றத்திற்கு தகுந்த பாதையாக மாற்றி விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இவர் அதிகமாக தன்னுடன் இருந்த போட்டியாளர்களை சந்தித்து சமூகவலைத்தளத்தில் லைவ் மூலமாக ரசிகர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் வெங்கட்பிரபுவோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக அல்லது பாடகியாக வாய்ப்பு கிடைத்து விட்டதா??என்று கேள்விகளோடு தங்களது விருப்பங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications