ஜனநாயகன் இசை விழாவுக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த ஆயுதம்.. 300 கோடி வசூல் படத்தை இறக்குகிறது! ட்விஸ்ட் இருக்கு
சென்னை: ஜனநாயகன் இன்னும் திரைக்கு வரவில்லை; ஆனால் அந்த படத்தைச் சுற்றிய போட்டி ஏற்கனவே தொலைக்காட்சி திரைகளில் தொடங்கிவிட்டது. மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய்யின் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற அறிவிப்பே சேனல் உலகில் சின்ன சலசலப்பை உருவாக்கியது.
விஜய் மேடையில் பேசினால் அது அரசியலா, சினிமாவா, இல்லையா ரசிகர்களுக்கு 'கடைசி மேடை உரையா' என்றெல்லாம் விவாதிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு வழக்கத்தைவிட அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழாவில் ஜீ தமிழ் சேனலில் தான் ஒளிபரப்பு செய்கின்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு நேராகவே விஜய் டிவி கண்ணில் விரலை வைக்கும் மாதிரி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

அதாவது, ஜனநாயகன் இசை வெளியீடு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, மாலை 3.30 மணிக்கு 'லோகா சேப்டர் 1: சந்திரா' படத்தை ஒளிபரப்புகிறது. இது ஒரு சாதாரண "படம் போடலாம்" முடிவு இல்லை என்பதே ரசிகர்களின் கருத்து. காரணம், லோகா என்ற பெயரே ஒரு வசூல் பிராண்டு. 'லோகா சேப்டர் 1: சந்திரா' என்ற முதல் பாகம், சுமார் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, மலையாள சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம்.
இந்தியாவில் மட்டும் 100 கோடியை தாண்டிய வசூல், "மாஸ் ஹீரோ இல்லாமலேயே இப்படி ஒரு சாதனையா?" என்ற கேள்வியை எழுப்பியது. அப்படி ஒரு படத்தினை விஜய்யின் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே டிவியில் போடுவது, 'நாங்க ஸ்டார் பவருக்கே பயப்பட மாட்டோம்; கதையே எங்கள் ஹீரோ' என்ற மறைமுக சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சன் டிவியும் சும்மா இல்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்புகிறது. ஒரே வார இறுதியில், ஒரே ரசிகர் கூட்டத்தை குறிவைத்து மூன்று சேனல்கள் மூன்று திசைகளில் இருந்து தாக்குவது போல காட்சியளிக்கிறது.
ஜீ தமிழ் விஜய்யை மேடையில் நிறுத்துகிறது; விஜய் டிவி 300 கோடி வசூல் செய்த படத்தின் தொடர்ச்சியை ஆயுதமாக்குகிறது; சன் டிவி சிவகார்த்திகேயனின் பராசக்தி இசை வெளியீட்டு விழாவை வைத்து தன் பங்குக்கு டி.ஆர்.பி பிடிக்க முயல்கிறது. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், "விஜய் படத்துக்கே இவ்வளவு போட்டியா?" என்று கேட்கிறார்களா, இல்லை பொங்கல் சீசன் என்றாலே சண்டை தானா? என்பதே புரியாத நிலை.

இந்த டிவி மோதலும் யாருக்கு சாதகமாக முடியும் என்பதை சொல்ல முடியாத சூழல் தான் இப்போது. ஒன்று மட்டும் உறுதி, ஜனநாயகன் திரையரங்கில் வெளியாகும் முன்பே, தொலைக்காட்சி திரைகளில் நடக்கும் இந்த கலாய்ப்பும், சேனல் யுத்தமும், பொங்கல் சினிமா சீசனை இன்னும் சூடாக்கி விட்டது.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
விஜய் தொகுதியில் திமுகவின் வெற்றி முகம்! - யார் இந்த சத்தியவாணி முத்து? -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications