ரசிகர்கள் நினைத்தது இந்த வாரத்தில் இல்லை...கண்டிப்பாக கூறிய கமல்... எவிக்ஷன் இந்த வாரம் இருக்கு
சென்னை: பண்டிகை காலமாக இருப்பதால் இந்தவாரம் எவிக்ஷன் இருக்காது என்றே ரசிகர்கள் கூறிவந்த நிலையில் அது முற்றிலும் தவறு என்று கமல் கூறிவிட்டார்.
இன்றைய ப்ரமோ வெளியாவதற்கு இவ்வளவு நேரமா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
லேட்டாக வந்தாலும் புது விஷயத்தை கூறிவிட்டார் கமல் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

முதல் ப்ரமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில நேரங்களில் எலிமினேஷன் இந்த வாரம் இல்லை என்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து விடுவார்கள். இது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த சீஸனில் இந்த வாரம் எப்படியும் எழிமினேஷன் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் கருத்துகள் கமல்ஹாசனிடம் கொண்டு சென்று விட்டது போல. அதனால்தான் ரசிகர்களுக்கு தெளிவாக முதல் ப்ரமோவில் அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

லேட்டான ப்ரமோ
வழக்கம்போல லேட்டாக வந்தாலும் முதல் ப்ரமோவில் கமல் ரசிகர்களின் குழப்பத்தை தீர்த்து விட்டார். ஏற்கனவே இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது. அதனால் ஓட்டு போட்ட ரசிகர்களின் நிலைமை பாவம் தான் என்று பல மீம்ஸ்கள் பரவி வந்த நிலையில், அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக கமல் அதிரடியாக பேசியிருக்கிறார். இவருடைய பேச்சை கேட்டதும் ரசிகர்கள் அப்போ யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பு கூறியிருக்கின்றனர். இதுவரைக்கும் எப்படியும் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று ஆணித்தரமாக கூறிக் கொண்டிருந்தவர்கள், இந்த ப்ரமோவை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

எதிர்பார்க்காத பஞ்ச் டயலாக்
இந்த வாரம் தீபாவளி வாரமாகவும், அதுமட்டுமல்லாமல் கமலின் பிறந்த நாளாகவும் இருப்பதால் எப்படியும் இந்த வாரத்தில் சலுகை கிடைக்கும் என்று பலர் அடித்து கூறிவந்தனர். அவர்களுக்கு பதில் கூறும் வகையில்தான் பண்டிகை காலங்களுக்கு சலுகைகள் வேண்டுமென்றால் கொடுக்கலாம், செலவு இல்லாமல் இருக்காது என்று புது தத்துவத்தை உதிர்த்து இருக்கறார். இவருடைய இந்த அழுத்தமான பேச்சைக் கேட்டதும் ஒரு சில ரசிகர்கள் அப்போ நாங்க ஓட்டு போட்டது வேஸ்டா போகவில்லை என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் குழப்பம்
இந்த வாரம் எலிமினேஷனில் கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்களுக்கு குழப்பமாக இருந்து வருகிறது. எனவே ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் தான் போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அதில் இந்த வாரத்தில் எப்படியும் சுருதி தான் வெளியே செல்வார் என்று அதிகமான ரசிகர்கள் கூறிவந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக அபிநவ் இருப்பதால் அவராக இருக்குமோ என்று பலர் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். ஏற்கனவே போன வாரத்தில் கமல் அபிநவ் மற்றும் வருணை எச்சரித்து அனுப்பி இருந்தார். அதனால் இவர்களில் யார் என்பது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications