எது வரம்பு??விவாதத்தை தொடங்கிய கமல்.. இன்றைய பஞ்சாயத்து களைகட்டுமா??
சென்னை: இன்றைய எபிசோட்டில் கமலின் பஞ்சாயத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புபடி விவாதம் இருக்குமா என்று பலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
எந்தப் பக்கமும் சாயாமல் எது வரம்பு??என்று வரம்பிற்கு இலக்கணம் வகுப்பாரா கமல் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

சுவாரசியம் குறைந்ததா - அதிகரித்ததா
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் தான் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு எபிசோடும் இருந்து வருகிறது. ஒரு நாள் சண்டை போட்டுக் கொண்டாலும் அடுத்த நாள் கூடிக் கொள்வது இங்கு வழக்கமாக நடந்து கொண்டிருப்பது என்றாலும் இந்த 5 வது சீசனில் கொஞ்சம் சுவாரஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்தும், குறைந்த வண்ணமுமாக தான் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசன் அமைந்து விட்டது என்று பலர் புலம்பி வருகின்றனர்.

ஏன் இந்த மாற்றம்
ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை தங்களுடைய கேரக்டரில் அடுத்தவர்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் சனிக்கிழமை ஆனால் அமைதியின் சிகரமாக மாறிவிடுகிறார்கள். அன்று கமலின் கேள்விகள் யாருக்கு புது பிரச்சனையை கிளப்பி விடுமோ என்று பலர் உள்ளுக்குள்ளே பயந்து கொண்டு முகத்தில் அதை வெளிக்காட்டாதவாறு நடித்துக்கொண்டு இருந்தாலும் ரசிகர்கள் நன்றாகவே அதை புரிந்து கொண்டு விடுகிறார்கள். மற்ற நாட்களைவிட சனி மற்றும் ஞாயிறு நாட்களில் போட்டியாளர்கள் மேக்கப்பில் மட்டுமல்லாமல் கேரக்டரிலும் சேஞ்ச் ஆகிவிடுகிறார்கள்.

வழக்கமாக நடப்பதுதான்
ஒவ்வொரு வாரமும் நடக்கும் பிரச்சனைகளை வைத்து கமல் வாத்தியார் வேலை செய்து கொண்டிருக்கும்போது, ஒரு வாரத்துக்கு ஒரு வாரம் சளைத்தது இல்லை என்று சொல்கின்ற மாதிரி சில நேரங்களில் புதிய பிரச்சனைகள் முளைத்து வருகிறது. ஆனால் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் பிரச்சனைகள் எந்த சீசனிலும் இல்லாத வகையில் தான் இருந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டில் காதல் மலர்வது ஒன்றும் புதியதல்ல. முதல் சீசனில் தொடங்கி நான்கு சீசன்களில் இது நடந்து கொண்டு வந்தாலும், இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலர் திருமணம் முடிந்த போட்டியாளர்கள் ஆகவே இருந்ததால் இதில் எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.

இது புதிய கதையாக இருக்கிறதே! !
திருமணம் முடியாத போட்டியாளர்களுக்கு அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து சக போட்டியாளர்கள் இவர்களுக்குள் காதல் இருக்கிறதா? என்று பல நேரங்களில் தீ மூட்டிவிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த சீசனில் பாவனி மற்றும் அபிநய் விஷயத்தில் சக போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விஷயம் ரசிகர்கள் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதில் பாவனி தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று எடுத்துக் கூறிய பிறகும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று சக போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து இன்றைய ப்ரமோவில் கமல் தெறிக்க விட்டிருக்கிறார்.
Recommended Video

பஞ்சாயத்து தொடங்கியது
இது என் தனிப்பட்ட விவகாரம் என்று ஒரு நபர் பிரகனட படுத்திய பிறகும் அதில் தலையிடுவது, அதைப்பற்றி பொதுவெளியில் பேசுவதோ, விவாதிப்பது வரம்புக்கு உட்பட்டதா??வரம்பு மீறியதா??எது வரம்பு விவாதிப்போம்... வீட்டுக்குள்ளும், நாமும் என்று கமல் வீரமாக பேசிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் இன்றைய பஞ்சாயத்து நன்றாக களைகட்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications