மக்கள் என்னை காப்பாத்துவாங்க ... குத்தலாக பேசி பஞ்சாயத்தை தொடங்கிய கமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல் சொல்வது போல இன்றைய எபிசோட்டில் கமல் பேசி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

யாரைப் பற்றி இந்த வார பஞ்சாயத்து இருக்கப் போகிறதோ என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

புரியிற விஷயத்தை கூட புரியாத மாதிரியே பேசும் வல்லமை கமலுக்கு மட்டுமே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களுக்கு வரும் ரசிகர்கள்

வார இறுதி நாட்களுக்கு வரும் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் அதில் வார இறுதி நாட்களை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். ரசிகர்கள் பலர் ஒவ்வொரு சீசன் களிலும் கூட ஒரு சில எபிசோடுகளை பார்க்காமல் விட்டுவிட்டாலும்

வார இறுதி நாட்களை பார்க்க தவற விடுவதில்லை. காரணம் கமல் மாஸாக பேசும் வார்த்தைகளை மட்டும் அல்லாமல்
அவர் செய்யும் வாத்தியார் வேலைகளையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ஒரு வாரம் முழுக்க நடந்த நினைவுகளை அசைபோட்டு கொண்டிருப்பதை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.

கமலை மிஸ் பண்ணிய ரசிகர்கள்

கமலை மிஸ் பண்ணிய ரசிகர்கள்

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை பற்றி வார இறுதிநாட்களில் பஞ்சாயத்து வைத்து தீர்த்து விடுவது தான் கமலின் வழக்கமாக இருந்து வருகிறது. இது தொடர்ந்து நான்கு சீசன்களில் தொடர்ந்து கொண்டு வருகிறது. ஆனாலும் தற்போதைய ஐந்தாவது சீசனில் கமல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வாரம் வரவில்லை என்பதால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார். ஆனால் அவர் கமல் போல இல்லை. ஒரு பக்கமாக தீர்ப்பு சொல்கிறார் என்று ரசிகர்கள் குறை கூறி வந்தனர். அந்த நேரத்தில் கமலை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வந்தனர்.

அது யாராக இருக்கும்

அது யாராக இருக்கும்

தற்போதைய இந்த வாரத்தில் பத்தாவது எலிமினேஷன் யார் வீட்டை விட்டு வெளியே செல்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த வார பஞ்சாயத்து எப்படியிருக்குமோ!!யாருக்காக இருக்குமோ??என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதில் இந்த வாரத்தில் மாட்டியிருப்பது தாமரைச்செல்வி தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.கமல், 'ஒரு சிலர் இந்த வீட்டிற்குள் என்னை பற்றி என்ன வேணாலும் நினைக்கட்டும் ஆனால் நாட்டில் இருக்கிற மக்கள் என்னை ஓட்டுப்போட்டு காப்பாத்துவாங்க என்று பலபேர் ரொம்ப தைரியமாக பேசிக்கிட்டு இருக்காங்க..ஆனால் இப்போது அந்த தைரியம் பயமாக மாறி இருக்கிறது. என்று கூறி இருக்கிறார்.

புரியாத புதிராக இருக்கு

புரியாத புதிராக இருக்கு

அது மட்டுமல்லாமல் மக்கள் என்ன செய்வார்களோ என்று தெரியவில்லை விட்டால் ஜாதகத்தையே மாற்றி எழுதி வடுவார்கள் போல மக்கள், என்ற பயம் தான் நாமினேஷனலிருந்து தப்பித்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பித்த மாதிரிதான் என்று உள்ளே ஒரு சிலருடைய செய்கைகள் இருக்கிறது. அதை பற்றி இன்று பேசுவோம் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்ததும் இந்த வாரம் மாட்டியிருப்பது தாமரை செல்வியா??அல்லது அபிநயா??என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+