அண்ணாச்சிக்கு வாய்ப்பு கொடுத்த கமல்...ஆரவாரத்தில் ரசிகர்கள்
சென்னை: இமான் அண்ணாச்சி தான் நினைத்தது மாதிரி கடைசிவரைக்கும் வீட்டிற்குள் இல்லாவிட்டாலும் கமல், அவருக்கு ஆறுதலான விஷயத்தை கூறியுள்ளார்.
இமான் அண்ணாச்சியின் ரசிகர்களுக்கு கமலின் செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
விரைவில் வெள்ளித்திரையில் கமலுடன் இணைவார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

போட்டிகள் அதிகரித்து உள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டாலே வாழ்க்கையில் பெரிய மாற்றம் நடந்துவிடும் என்று பல போட்டியாளர்கள் போட்டிபோட்டு தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடங்கிவிட்டனர். முதல் சீசன் முதல் கடந்த நான்கு சீசன்கள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலர் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இமான் அண்ணாச்சிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்ணாச்சிக்கு தைரியம் தான்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒருசில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தலைதெறிக்க ஓடி விடுவதும் உண்டு. காரணம் இதில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் நல்ல பெயரில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களின் பெயரும் மரியாதையும் தலைகீழாக குறைந்து விடுகிறது. இதனால் தாங்கள் இருப்பதை இழந்து விடவேண்டாம் என்று இருந்து வருகின்றனர். ஆனால் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தற்போது உச்சத்தில் இருக்கும் இமான் அண்ணாச்சி தைரியமாக இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

அண்ணாச்சியின் நம்பிக்கை
ஆரம்பத்தில் நகைச்சுவையாக இவர் பேசும் வார்த்தைகளும், செயல்களும் பலருக்கும் பிடித்து இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல ஒரு சில இடங்களில் இவர் செய்யும் செயல்கள் ஆணாதிக்கத்தில் இருப்பதாகவும், பெண்களை மட்டம் தட்டுகிறார் என்று பல நேரங்களில் இவர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நான் எப்படியும் 106 நாட்கள் இருப்பேன் என்று நம்பிக்கையாக கூறிக் கொண்டிருந்த இவர் தற்போது 70 நாட்களை தாண்டிய நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனால் இவருடைய வெளியேற்றம் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. நாங்கள் கஷ்டப்பட்டு ஓட்டு போட்டாலும் பிக்பாஸ்க்கு பிடித்த நபர்களை செவ் செய்துவிட்டு அண்ணாச்சியை தூக்கி விட்டனர் என்று ரசிகர்கள்
கோபத்தில் இருந்து வருகின்றனர்.

மகிழ்ச்சியான செய்திதான்
அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கும், அண்ணாச்சிக்கும், அண்ணாச்சி வெளியேறும்போது கமல் கூறிய ஆறுதலான வார்த்தை மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தன்னுடைய திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று கமல் கூறியிருக்கிறார். இதுவே தனக்கு கிடைத்த பெரிய கிப்ட் தான் என்று அண்ணாச்சி மகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். இதை பார்க்கும்போது எப்படியும் வெள்ளித்திரையில் இனி அண்ணாச்சிக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications