ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே... கணவனின் சந்தோஷத்தை மீண்டும் கொண்டுவந்த கன்னிகா
சென்னை: காதல் திருமணம் செய்துகொண்ட கன்னிகா, கணவன் மற்றும் குடும்பத்தோடு செய்த செயல் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
கணவரின் சாதனைகளை பலருக்கும் தெரியப்படுத்துவது தான் இவருடைய முயற்சி என்று தற்போது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் விளங்க வைத்துள்ளார்.

சினேகனின் வருத்தம்
கவிஞர் சினேகன் எனும் பெயரைக் கேட்டதும் பலருக்கும் பரிச்சயமானவர் தான். இவருடைய பாடல்கள் பல்லாயிரக்கணக்கான இருந்தாலும் இவர்தான் இந்த பாடலை பாடினார் என்று பலருக்கும் தெரியாமல் தான் இருந்துள்ளது. இவருடைய பாடல்கள் பல ஹிட்டாகி உள்ளது. ஆனால் அதன் சிறப்பு இவரை வந்து சேரவில்லை என்பது சினேகனின் காதல் மனைவியின் வருத்தமாக உள்ளது. அதனால் தற்போது சினேகனின் சிறப்பை வெளிக்காட்டுவதும், தன் கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பை அனைவருக்கும் புரிய வைத்திருக்கவும் கன்னிகா எடுத்திருக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மனைவியால் கிடைத்த மகிழ்ச்சி
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள் தற்போது அது போலத்தான் சினேகனின் வெற்றிக்குப் பின்னாலும் அவருடைய மனைவியாக இருந்து வருகிறார் என்று சினேகன் கூறியிருக்கிறார். தன்னுடைய பாடல்கள் பல வெற்றி அடைந்தாலும் அதற்கான அதனை எழுதியது நான்தான் என்று பலருக்கும் இதுவரைக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது கன்னிகா செய்த செயலால் அனைவரும் தனக்கு வாழ்த்துக்களை கூறி வருவதாகவும் அது தன்னுடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கிறது என்று சினேகன் கூறியிருக்கிறார்.

எட்டு வருட காதல்
சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்து கொண்டிருந்தாலும் இவர்கள் தங்களுடைய துறையில் ஜெயித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் பொறுமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை அதனால்தான் இவர்கள் எட்டு வருடம் கழித்து திருமணம் செய்துள்ளார்கள். இருவரின் திரை பயணத்திற்கும் இருவரும் மாற்றி மாற்றி ஆறுதல் கொடுத்து வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து வருகிறார்களாம்.

புத்தாண்டு தினத்தில் சிறப்பான செயல்
புத்தாண்டு தினத்தில் அனைவருடைய வாழ்க்கையும், முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட வேண்டும் என்று அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்போது போல கன்னிகா, சினேகன் மற்றும் அவருடைய தந்தை மூவரும் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்துள்ளனர். இவர்களின் புது முயற்சிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது இந்த வீடியோவிற்கு சினேகன் எழுதிய ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே பாடலை சேர்த்திருக்கிறார். இந்த பாடலை பார்த்ததும் பலர் உருகிப் போய் இருக்கின்றனர். உண்மையில் இந்தப் பாடல் மனதை உருக வைப்பதாக தான் இருக்கிறது. அதனை பீல் பண்ணி எழுதிய சினேகனுக்கு வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications