அதுக்குள்ள குழந்தை பற்றியே எல்லோரும் கேட்கிறார்கள்... கண்கலங்க வைத்த கன்னிகா
சென்னை: திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களுக்குள் பார்ப்பவர்கள் பலர் கேட்கும் கேள்வியால் மனத்தொடிந்து போயிருக்கிறார் கன்னிகா ரவி.
பலர் இப்படித்தான் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்று தன்னுடைய வருத்தத்தை வேதனையோடு தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம்
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் கன்னிகா ரவி சமீபத்தில்தான் பாடலாசிரியர் சினேகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் எட்டு வருட காதல் திருமணத்தில் முடிந்தது. இருந்தாலும் திருமணத்திற்கு பிறகும் இவர்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்ப வரைக்கும் இருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்து கொண்டிருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் இருந்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் பார்த்து பலர் பொறாமை பட்டு இவர்கள் மனம் நோகும்படி கேள்விகளை கேட்டு வருகிறார்களாம்.

மனம் நோக வைக்கும் கேள்வி
பொதுவாக திருமணம் முடிந்தாலே பெண்கள் மற்றும் ஆண்கள் யாரும் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் கேட்கும் கேள்வி வீட்டில் ஏதாவது விசேஷம் உண்டா??என்று தான். அந்த மாதிரி தான் தற்போது கூட இவரிடம் அதிகமானோர் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் கேட்டு வருகிறார்கள். இது இவருக்கு எரிச்சலடைய வைக்கும் கேள்வியாக இருந்துவருகிறது என்று கூறியிருக்கிறார். தன்னுடைய திறமைகளை அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் இவர் இருபத்தி ஆறு வயது பெண்ணாக இருந்தாலும் இவரை விட வயதில் அதிகமாக காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று தான் இவர்கள் காதலை கூட மறைமுகமாக வைத்துக்கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அந்த ஒரு மாற்றம் ஏற்படாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்ததால்தான் சரி என்று திருமணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் கன்னிகா திரைப்படங்களில் நடிப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சின்னத்திரையில் இவர் கடைசியாக நடித்த கல்யாண வீடு சீரியல் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்திருந்தார். தன்னுடைய திறமையாலும் அழகாலும் அனைவரின் மனதையும் வசீகரித்து விடுகிறார்.
Recommended Video

கண்கலங்க வைத்த கருத்து
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கண்ணியமான உடை அணிந்து குடும்ப பாங்காக இருப்பதால் பலருடைய பேவரைட் நடிகையாக இருந்து வருகிறார். இவருடைய திடீர் காதல் திருமணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய இந்த கண்கலங்க வைக்கும் பேச்சு ரசிகர்களின் மனதையும் பாதித்து இருக்கிறது. அதனால் பலர் இவருக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications